நயன் தாராவுக்கு இரட்டைக் குழந்தை பிறந்த விசேஷத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக தள பக்கத்தில் பதிவிட்ட அடுத்த நொடியே திமுக பொதுக்குழு, ராகுல் நடைபயணம், அதிமுக ஆலோசனைக் கூட்டம் என்ற அரசியல் டிரண்டிங் எல்லாம் காலியாகி சமூக தளங்கள் முழுதும் நயன் தாரா விக்கியின் இரட்டை குழந்தைகளின் பிஞ்சுப் பாதங்களே பரவி வருகின்றன.
ஆயிரக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் விஐபிகளும் நயன் தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அதேநேரம் பலரும், திருமணமான நான்கு மாதங்களில் குழந்தையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மலிவான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் நயன் -விக்கி தம்பதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் ஆங்காங்கே பதிவுகள் தென்படுகின்றன.
அம்பிகை தாஸ்
லேடி சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் அம்மாவாக மாறினார்… வாழ்த்துக்கள்! மேலும், அவர்கள் எந்த வழியில் பெற்றோரானார்கள் என்பதை ஆராய்வது யாருடைய வேலையும் இல்லை. யாருடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற தகவல்களைப் பெற உங்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் பகிர்ந்து கொண்டால், அது அவர்கள் பெற்றிருக்கும் பாக்கியம். அது பொது நபராக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி.
ஃபாரம் கேரளம்
இந்த நாட்களில் பிரபலங்கள் மத்தியில் வாடகைத் தாய் மிகவும் பொதுவானது. இதைக் கொண்டாடுங்கள். நயன்ஸ் மற்றும் விக்னேஷ் வாழ்த்துக்கள்
துளசி
நயன் தாராவுக்கு குழந்தை பிறந்த தகவல் கேட்டு மக்கள்ஏன் அதிர்ச்சியடைந்து முட்டாள்தனமாக கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்? கருமுட்டைகள் பற்றியும் வாடகைத் தாய் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? இந்திய மக்களுக்கு செக்ஸ் எஜுகேஷன் உண்மையில் தேவை.
–வேந்தன்
நயன்தாரா – விக்னேஷ் சிவன் : திருமணமான 4 மாதங்களில் இரட்டை குழந்தை!