சருமத்திற்கு மட்டும் பராமரிப்பை கொடுத்துவிட்டு உதடுகளை சரிவர கவனிக்காவிட்டால் முகத்தின் அழகு முழுமையாக வெளிப்படாது. இதழ்களை அழகாக்க லிப்ஸ்டிக்தான் வழி என்று இல்லை. இயற்கையான வழிகளில் இதழ்களை பொலிவூட்ட பியூட்டி டிப்ஸ் இதோ…
கருமையான உதடுகள் உடையவர்கள் ரோஜா இதழ்களை வேகவைத்து, அத்துடன் சர்க்கரைப்பாகு கலந்து உதட்டில் அப்ளை செய்யவும். அரை மணி நேரம் கழித்து ,காட்டன் துணியல் மெதுவாக துடைத்து எடுத்து லிப் பாம் அப்ளை செய்யவும். தொடர்ந்து இதனை செய்து வந்தால் உதட்டின் நிறம் மாறும்.
உதடுகள் வறண்டு தோல் உரிந்து காணப்படுகிறது எனில் தினமும் இரவு வெண்ணெயை உதடுகளில் அப்ளை செய்தால் மிருதுவாகும்.
உதடுகள் வெடித்து சுருக்கங்களுடன் இருக்கிறது எனில் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், வெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாக கலந்து தினமும் இரவு உதட்டில் அப்ளை செய்து வந்தால் உதடுகள் இயற்கை சிகப்பழகு பெறும்.
உதடுகளுக்கு வாரம் ஒரு முறை ஸ்க்ரப்பர் பயன்படுத்துவது நல்லது. ஸ்கரப்பர் வாங்க முடியாதவர்கள் சர்க்கரையை உதடுகளில் தேய்து லேசாக மசாஜ் செய்து சுத்தம் செய்தால் இறந்த செல்கள் நீங்கி உதடுகள் இயற்கை அழகில் மிளிரும்.
தினமும் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் இரவு தூங்கச் செல்லும் முன் உதடுகளின் மேல் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து லிப்ஸ்டிக்கை காட்டன் துணி கொண்டு துடைத்து எடுத்து விடுவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘கிராமி’ இசையமைப்பாளரின் ‘சூப்பர்ஹிட்’ சினிமா பாடல்கள்!
சென்னை திரும்பும் முதல்வர்: குவியும் திமுக நிர்வாகிகள்!
தொடர் சரிவில் தங்கம்… இன்றைய விலை இதுதான்!
சைதை துரைசாமி மகன் எங்கே? – 3ஆவது நாளாக மீட்புப் பணி தீவிரம்!