பியூட்டி டிப்ஸ்: கருவளையம் வராமல் இருக்க… வந்தால் விரட்ட… ஈஸி வழிகள் இதோ!

Published On:

| By christopher

கருவளையம் இல்லாத பளிச் கண்கள்தான் எல்லாரின் விருப்பமும். ஆனால், கண்கள் சோர்வடையும் அளவுக்கு அவற்றுக்கு வேலை கொடுப்பது, கண்களுக்கு ஒப்புக்கொள்ளாத காஸ்மெட்டிக் அயிட்டங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கருவளையம் வருவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இந்த நிலையில் கருவளையம் வராமல் இருக்க…

தினமும் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.

கம்ப்யூட்டர், மொபைல் என்று தொடர்ச்சியாகப் பார்த்துக் கண்களைச் சோர்வடைய வைக்கக் கூடாது.

வெயிலில் செல்லும் போது சன் கிளாஸ் போட மறக்க வேண்டாம்.

குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சை தினமும் பத்து நிமிடங்கள் கண்களின் மேல் வைத்து எடுக்கலாம்.

தூங்கும்போது தலையைச் சற்று உயரவைத்துத் தூங்கினால், முகத்துக்கும் கண்களுக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து கருவளையம் வராது.

இந்த நிலையில் கருவளையம் மறைய…

தக்காளிச்சாறு, எலுமிச்சைச்சாறு இரண்டை யும் சம அளவு கலந்து கண்களின் கீழே தடவி, பத்து நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவி வர, படிப்படியாகச் சரியாகிவிடும்.

உருளைக்கிழங்கைக் கழுவி, தோலுடன் துருவிச் சாறெடுத்து, அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து எடுத்துவர, கருவளையம் மறையும்.

பாதாம் எண்ணெயை தினமும் கண்களின் கீழே தடவிவர, கருவளையம் நீங்கும்.

காய்ச்சாத பாலை கண்களைச் சுற்றித் தடவுவதும் நல்ல தீர்வாகும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : இஸ்ரேல் தாக்குதல் முதல் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடக்கம் வரை

கிச்சன் கீர்த்தனா : தினை அரிசி சர்க்கரை பொங்கல்

இது என்னடா காந்திக்கு வந்த சோதனை? – அப்டேட் குமாரு

மத்திய மாநில அரசுகளின் உறவை ஆளுநர் துண்டிக்கிறார் : அமைச்சர் ரகுபதி

ஒரு எழுத்தாளனுக்கு இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்? – நெகிழ வைத்த ராஜேஷ்குமாரின் பேஸ்புக் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel