பொதுவாக அதிக உழைப்பின்போதோ அல்லது வெயில் போன்ற சூட்டாலோ, உடலில் இருந்து தோல் வழியாக வெளிவரும் வியர்வை, சிலருக்கு எல்லா நிலையிலும் வெளிப்படும். இதற்கான தீர்வு என்ன?
நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், காற்றோட்டமுள்ள இடங்களில் இருக்க வேண்டும், பருத்தி உடைகளையே அணிய வேண்டும் போன்ற எளிய தீர்வுகள் இருந்தாலும் கீழ்க்கண்டவற்றையும் பின்பற்றலாம்.
குடிக்கும் தண்ணீரில் நன்னாரி வேரைப் போட்டுவைத்து அருந்தலாம்.
அதிக சூடான உணவுகளைத் தவிர்த்துவிட்டு, இளஞ்சூடான உணவுகளைச் சாப்பிடலாம்.
காரம் நிறைந்த உணவுகள், அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம்.
பழச்சாறுகளை அருந்தலாம்.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
மதுப்பழக்கம், புகைப்பழக்கம் தவிர்க்கலாம்.
அதிக பித்தம் காரணமாகத்தான் வியர்வை அதிகமாக வெளியேறுவதைத் தவிர்க்க முதல் நாள் இரவு 20 கிராம் தனியாவை 200 மி.லி தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் அதை வடிகட்டி, பல் துலக்கிய பின்னர் அருந்தலாம்.
நெல்லிக்காய் சூரணத்தை வெல்லம், பசு நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் பித்தம் தணிந்து வியர்வை வெளியேறுவது தடுக்கப்படும்.
இனிப்பு, துவர்ப்பு, கசப்பு சார்ந்த உணவுகளுக்குப் பித்தத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு என்பதால் அத்தகைய உணவுகளை உட்கொள்ளலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சேமியா கட்லெட்