பொதுவாகவே அனைவருக்கும் வியர்வை நாற்றம் என்பது ஒரு தொல்லையாகவே இருக்கும்.
நறுமணமிக்க சோப் போட்டு குளித்தால் மட்டும் வியர்வை நாற்றம் போய்விடாது. அதற்கு ஒரு சில விடயங்களை செய்தால் மட்டுமே வியர்வை நாற்றம் போகும்.
நம்மில் பலர் சுத்தமாகத்தான் குளிக்கிறேன். ஆனால் ஏன் இப்படி துர்நாற்றம் வீசுகிறது என்று கவலைப்படுபடுவார்கள்.
வீட்டில் இருக்கும் எளிய பொருள்களைக் கொண்டு அக்குளில் இருந்து வரும் வியர்வையையும் அதன் நாற்றத்தையும் நிரந்தரமாக எப்படி விரட்டலாம் என்று பார்க்கலாம்.
எலுமிச்சை
தினமும் குளிக்கும் போது தண்ணீருடன் எழுமிச்சை சாற்றை சேர்த்து, அரை மணிநேரத்தில் குளித்தால கிருமிகள் அழிந்து துர்நாற்றமும் அடிக்காது.
சந்தனம்
சந்தனக் கட்டை நீரில் குழைத்து அக்குளில் இரவு தூங்கும் போது தினமும் பூசி வந்தால் துர்நாற்றம் நீங்கும் மற்றும் வியர்வையும் வராது.
மஞ்சள் தூள்
கிழங்கு மஞ்சளை குழைத்து பூசினால் நல்லது. ஆடையின் வெளியே நிறம் தெரியும் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் போது அல்லது இரவு நேரங்களில் பூசலாம்.
தயிர்
தினமும் குளிப்பதற்கு முன்பு, தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து அக்குளில் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.
கற்றாழை
கற்றாழையை அக்குளில் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் வாடை நீங்கும்.
தக்காளி
தக்காளியை மிக்ஸியில் அரைத்து, அதை தடவி அரை மணிநேரம் கழித்து குளித்தால் மணம் நீங்கும்.
சுபஸ்ரீ
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…