Home Remedies for Oily Face

பியூட்டி டிப்ஸ்: எண்ணெய் வடியும் முகத்துக்கு இதோ தீர்வு!

டிரெண்டிங்

கோடைக்காலத்தில் அதிகப்படியான பிரச்சினை முகத்தில் எண்ணெய் வடிவது. அலுவலகம் அல்லது ஏதாவது நிகழ்ச்சிக்கு சொல்ல அழகாக தயாராவோம். ஆனால், சிறிது நேரத்திலேயே முகத்தில் எண்ணெய் வடிந்து பொலிவற்று போகும்.

இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களைத் தொடர்ந்து பின்பற்றினாலே போதும். இதன் மூலம் அழகான, பளிச் என்ற சருமத்தை பெற முடியும்.

முகத்துக்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயறு மாவு போட்டு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

அடிக்கடி பீட்ரூட் அல்லது தக்காளி சாறு குடிப்பது சருமத்தைப் பளபளப்பாக்கும்.

தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தடவுங்கள். பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை மூன்று முறை செய்து வர வேண்டும்.

துளசி, வேப்பிலை, புதினா மூன்று இலைகளையும் சம அளவு எடுத்துக்கொண்டு மிக்ஸி  ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.  இந்த மிருதுவான பேஸ்ட்டில் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ்பேக் ரெடி. முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம்  அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

இப்படி வாரத்துக்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக்கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பனானா ரோல்ஸ்

களத்தில் அதிரடி காட்டிய ஸ்டோனி்ஸ்… அதிர்ச்சியில் இருந்து மீளாத CSK ரசிகர்கள்!

தீப்பெட்டி இருக்கா? அப்டேட் குமாரு

சூறாவளி பிரச்சாரம்… 1.22 கோடி பேரை சந்தித்த உதயநிதி : பயணித்தது எவ்வளவு தூரம் தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *