ஹெல்த் டிப்ஸ்: வாய்வுப் பிரச்சினையால் அவதிப்படுபவரா நீங்கள்… இதோ அதற்கான தீர்வு!

டிரெண்டிங்

செரிமானத்தின்போது குடலில் உண்டாகும் வாய்வு, எப்போதாவது  வெளியேறுவது இயல்புதான். ஆனால், அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாய்வும் வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் (Fermentation) காரணமாகவே வாய்வு ஏற்படுகிறது.

மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில் மலம் வெளியேறாமல் நீண்ட நேரம் குடற்பகுதியில் தேங்கும்.

கூடுதல் நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறும். உணவுப் பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாய்வு ஏற்படலாம்.

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் பீன்ஸ், முளைகட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராஃபினோஸ் (Raffinose), உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாய்வுப் பெருக்கம் ஏற்படலாம்.

பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாய்வுவை உண்டாக்கும். அதனால் இவற்றைச் சமைக்கும்போது அதிக அளவில் மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ளலாம். மிளகு மற்றும் சீரகத்துக்கு இருக்கும் வாய்வகற்றி செய்கை காரணமாக, குடலில் வாய்வு உண்டாகாது.

இருப்பினும் வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைப்பது நல்லது.

வாய்வு நிரப்பப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள், குடலில் வாய்வுவை அதிகளவில் சேர்ப்பதோடு வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும்.

எண்ணெயில் பொரித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாய்வுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.

பெருங்குடல் சார்ந்த நோய்கள், செரிமான தசைகளில் பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், வயிற்றுப் புண் போன்றவற்றின் காரணமாக, அந்தந்த நோய்க் குறிகுணங்களுடன், ஒரு நாளில் பல முறை வாய்வு வெளியேறும்.

இதைத் தவிர்க்க… புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். சித்த மருந்துகளில், இஞ்சித் தேன், இஞ்சி ரசாயனம், சோம்புத் தீ நீர், ஓமத் தீ நீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும். தயிர்ச்சுண்டி சூரணம் எனும் மருந்து, வாய்வுப் பிரச்சினையோடு சேர்த்து, வயிற்று உப்புசம், வயிற்றுவ லி போன்றவற்றை உடனடியாக குறைக்கும்.

முக்கியமாக… அந்த டயட், இந்த டயட் என மாற்றி மாற்றி உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, உணவில் ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : பட்டர் ஃப்ரூட் சாக்கோ

டெய்லர் அக்காவா? என்னடா நடக்குது இங்க… அப்டேட் குமாரு

விவசாயத்தில் நவீனம்: தமிழகத்தில் சிங்கப்பூர் அரசு செய்யப் போகும் அசத்தல் திட்டம்! 

ஆணவக்கொலைக்கு எதிராக ‘தாஸ்’… கம்ஃபர்ட் சோனை விட்டு வெளியே வந்த ஜெயம் ரவி

Home Remedies For Gastric Problem

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *