2022 ஆம் ஆண்டு Chat GPT அறிமுகமானது முதல் செயற்கை நுண்ணறிவு(AI)-இன் ஆதிக்கம் கோலோச்ச துவங்கியது. சின்ன சின்ன செயல்கள் தொடங்கி பெரிய மென்பொருள் நிறுவனங்கள் வரை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பம் ஒரு புறம் நன்மையாக இருந்தாலும், இதை அனைத்திற்கும் அதிக அளவில் பயன்படுத்தும் பொழுது பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்போதுள்ள காலகட்டத்தில் புகைப்படம் பதிவிடுவது முதல் அதை எடிட் செய்வது, மொழி மாற்றுவது என அனைத்து வேலைகளையும் மிகவும் சுலபமாக செய்து முடித்து விடும்.
முடிந்த வரை AI தொழில் நுட்பத்தை குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு புறம் இப்படி சென்று கொண்டிருக்க, மற்றுமொருபுறம் நாசா தற்போது AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் மற்றும் வேற்றுகிரக வாசிகள் நடமாட்டத்தை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலமாக 90 சதவிகிதம் வரை துல்லியமான தகவல்களை பெற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லது இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதால் இனி வரும் காலங்களில் வானியற்பியலில் ஒரு மாபெரும் புரட்சி நிகழும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாகவே வேற்றுகிரக வாசிகள் (ஏலியன்) நடமாட்டம் இருப்பதாக பல செய்திகள் வந்த நிலையில், தற்போது செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் துல்லியமாக விடை தெரியும்.
மற்ற கோள்களை ஆராயும் விண்கலன்களில் உள்ள சென்சார்கள் வேற்றுகிரக வாசிகளின் மூலக் கூறுகளை குறிக்கும் திறன் கொண்டுள்ளதாக இருந்தாலும்,
புதிரான உயிரியல் செயல்முறைகளை குறிக்கும் கனிம மூலக்கூறுகள் காலப்போக்கில் சிதைந்துபோவதாக தெரிய வந்துள்ளது.
இப்போதுள்ள தொழில் நுட்பத்தில் அவற்றின் இருப்பை கண்டறிவது கடினம்.
ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட உயிரியல் சமிக்ஞைகளை குறிக்கும் மூலக்கூறு நுட்பமாக வேறுபாடுகளை கண்டறியும் திறன் கொண்டது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான மாதிரிகளில் கூட செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் 90 சதவிகிதம் வரை துல்லியமாக கண்டறிய முடியும்.
எதிர்காலத்தில் இந்த AI அமைப்பு சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களில் தரையிரங்கும் லேண்டர் மற்றும் ரோவர்களில் பொருத்தப்பட வாய்ப்புள்ளது.
நாசாவின் இந்த முயற்சி வெற்றியைடைந்தால், வானியற்பியலில் மிகப் பெரிய புரட்சி நிகழப்போவது உறுதி.
-பவித்ரா பலராமன்
ரூ.2000 விலையில் சூப்பரான ஸ்மார்ட் வாட்ச்!
44 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை!