என் நினைவுகளில் எப்போதும் சென்னை இருக்கும்: மனம் நெகிழ்ந்த பிரதமர் மோடி!

Published On:

| By srinivasan

“என் நினைவுகளில் எப்போதும் சென்னை இருக்கும். சென்னை வருகையை ஒருபோதும் மறக்க முடியாது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா நேற்று பிரமாண்டமாக நேரு உள் விளையாட்டரங்கில் துவங்கியது.

“தாய் மண்ணே வணக்கம்” உள்ளிட்ட பல தமிழ்ப் பாடல்களின் இசை, பின்னணியில் ஒலிக்க அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் கமலின் குரலில் தமிழ் பண்பாட்டின் கலாச்சாரம் கலை நிகழ்ச்சியாக நடைபெற்றது.

பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருக்கு மாமல்லபுரம் கடற்கரை கோயில் சிற்பத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.

அதனை தொடர்ந்து பேசிய பிரதமர், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பல வகைகளிலும் முதன்மையானதாக நினைவு கூறப்படும். மிக குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு அற்புதமாக செய்துள்ளதாக தெரிவித்தார். நேற்று நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து ட்விட்டரில், பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,

சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் அவர் குஜராத் மாநிலத்துக்குப் புறப்பட்ட நிலையில், “என் நினைவுகளில் எப்போதும் சென்னை இருக்கும். சென்னை வருகையை ஒருபோதும் மறக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 187 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள வீரர்கள் தமிழ் நாடு அரசின் ஏற்பாட்டை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் தென்னிந்திய உணவுகள் சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டி பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இதை ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு அரசு, ஒரு முறை உண்ட உணவு மறுமுறை வராத வகையில் ,  53 மெனுவில் 700-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயார் செய்து வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின், சமையல் பன்முகத்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் ஒவ்வொரு வகையான உணவை காணலாம். நீங்கள் சென்னை நகரத்தை ரசித்து, சுற்றி பார்ப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel