நம் உடலில் ரத்தம் பாயாத இரு பகுதிகள் உண்டெனில் அவை முடி மற்றொன்று நகங்கள் ஆகும். இரண்டிலுமே நரம்பு இல்லாததால்தான் அவை வெட்டப்படும்போது நமக்கு வலிப்பதில்லை. உலகம் முழுவதிலுமே மக்கள் இவ்விரண்டையும் அழகுபடுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில், முடி பராமரிப்பு குறித்து உலக அளவில் இருக்கும் விழிப்புணர்வு, நகப் பராமரிப்புக்கு இல்லை என்பதே நிஜம்.
உங்களுடைய கார் முதல் வீட்டுக் கதவு வரை அனைத்தையும் எண்ணெயைப் பயன்படுத்தி பளபளப்பாக வைத்துக்கொள்வது போல தினமும் சிறிது பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது அவகாடோ எண்ணெயை உங்கள் நகங்களில் பயன்படுத்துவன் மூலம் உங்கள் நகங்களைப் பளபளப்பாகவும் வறட்சியின்றியும் வைத்துக்கொள்ள முடியும்.
நகங்களுக்கு பாலிஷ் போடத் தொடங்கும் முன் வெதுவெதுப்பான நீரிலும், பாலிஷ் போட்ட பிறகு, குளிர்ந்த நீரிலும் உங்கள் விரல்களை சிறிது நேரம் ஊற வைக்கவும். இதன்மூலம் நீங்கள் உங்கள் நகங்களில் உடனடியாக வித்தியாசத்தை உணருவீர்கள்.
அதிகமாகத் துணி சோப்பு மற்றும் பாத்திரம் கழுவும் சோப்புகளைப் பயன்படுத்துவதால் உங்கள் தோல் மற்றும் நகங்கள் வறண்டு, உடையக்கூடியதாக மாறிவிடும் வாய்ப்புள்ளது. துணிகள் அல்லது பாத்திரங்களைச் சுத்தம் செய்யும்போது அதற்கு வெறுங்கையைப் பயன்படுத்துவதற்கு பதிலாக கையுறைகளைப் பயன்படுத்தவும். இதனால் உங்கள் தோல் மற்றும் நகங்களை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ள முடியும்.
உங்கள் உடல் நலத்துக்கு எது ஆரோக்கியமானது எனக் கேட்டுத் தெரிந்து சாப்பிடுவது போல… உங்கள் உடல் வளர்ச்சிக்கேற்ப நகங்களுக்கும் எது சிறந்ததென தெரிந்துகொள்வது சிறப்பு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்படும் துரை தயாநிதி?
பெயரை மாற்றிய பீலா ராஜேஷ்: என்ன காரணம்?