பியூட்டி டிப்ஸ்: இனி நகங்களைப் பராமரிப்பது ஈஸி!

Published On:

| By Kavi

Nail Care Routine 2024

உடல் உறுப்புகளை சரியாகப் பராமரிப்பது என்பது ஆண், பெண் இருபாலருக்கும் அவசியமானது. அந்த வகையில், நகங்களை பராமரிப்பது அவசியம். பொதுவாக பெண்கள் மட்டுமே நகங்கள் பராமரிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவதுண்டு. ஆனால், ஆண்களும் நகங்களை உடைக்காமல் பராமரிக்க வேண்டியது அவசியம்.

நகங்களை கடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். அடுத்து, கடினமானவற்றை உரிப்பது, திறப்பது போன்றவற்றுக்கு நகங்களை பயன்படுத்தாதீர்கள். நகங்களின் வேர் பாதிக்கப்பட்டுவிட்டால் மீண்டும் நகம் வளர்வது கடினமாகி விடும்.

நகங்களை வெட்டும் முன் அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி வெட்டினால் சுலபமாக இருக்கும். ஏதாவது ஒரு எண்ணெயை லேசான சூட்டில் நகங்களுக்கு மசாஜ் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக உடையாமல் அதே நேரத்தில் அழகாக இருக்கும். நகங்கள் ஆரோக்கியமாக இருக்க எண்ணெய் மசாஜ் சிறந்தது.

மிதமான வெந்நீரில் நகங்களை சிறிது நேரம் வைத்தால் அதில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும். பெரும்பாலானோர் கை நகங்களை மட்டும் அழகாக வைத்திருப்பர். ஆனால், கால் நகங்களுக்கும் அதே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

நெயில் பாலிஷ், அகர்லிக் நக பயன்பாட்டை குறைக்கவும்: நெயில் ஆர்ட், பாலிஷ் மற்றும் அக்ரிலிக் நகங்கள் கவர்ச்சிகரமானவையாக இருந்தாலும், அவற்றால் நகங்களின் வளர்ச்சி மற்றும் வலிமை பாதிக்கப்படுகிறது. நகத்துக்கு நெயில் ஆர்ட் செய்வது, அகர்லிங் நகங்களை ஒட்டிக்கொள்வது போன்ற விஷயங்களை கூடுமான அளவு குறைத்துவிடுவது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: எதற்கெடுத்தாலும் தைலம் தடவும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

பியூட்டி டிப்ஸ்: விஸ்வரூபம் எடுக்கும் பொடுகுத்தொல்லை.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சை!

ஹெல்த் டிப்ஸ்: வெறும் வயிற்றில் உடற்பயிற்சி..  நல்லதா? கெட்டதா?

பியூட்டி டிப்ஸ்: எல்லாருக்கும் ஏற்றதா ஹைட்ரா பேஷியல்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel