மைசூரை சேர்ந்த நபர் ஒருவர் தனது அம்மாவிற்காக இருசக்கர வாகனத்தில் 60 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் பயணித்து ராமேஸ்வரம் வந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள போகாதி பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி – ரத்தினம்மா தம்பதி. இவர்களது மகள் கிருஷ்ணகுமார் (45). பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றிய கிருஷ்ணகுமாரின் தந்தை தட்சிணாமூர்த்தி 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதன் பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் தாய் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வராததால் கிருஷ்ணகுமார் அவரது தாயை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்காகக் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தந்தை பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகுமார் அவரது அம்மாவுடன் ஆன்மிக பயணத்தைத் தொடங்கினார்.
மைசூரில் (கர்நாடகா) தொடங்கிய பயணம் அப்படியே ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், கோவா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களைக் கடந்து தற்போது தமிழகத்தை இருவரும் வந்தடைந்துள்ளனர்.
அனைத்து மாநிலத்திலும் உள்ள பிரபலமான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர். அதன் ஒரு பகுதியாகத் தான் நேற்று (நவம்பர் 28) ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இப்படிப் பல மாநிலங்களைக் கடந்து தொடரும் இந்த பயணத்தில் தாயும், மகனும் சேர்ந்து இதுவரை 60,459 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் செல்ல இருக்கும் இருவரும் காசியில் இருந்து கொண்டு வந்துள்ள கங்கை நீரை ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர்.
பின்னர் அடுத்த மாதம் மைசூர் திரும்ப உள்ளதாக கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
தற்போது முழுமையாக ஒரு நாளை கூடப் பெற்றோருடன் செலவிடாமல் இருப்பவர்கள் மத்தியில் கிருஷ்ணகுமார் தனது அம்மாவிற்காகப் பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்துள்ளது காண்போரை வியப்படையச் செய்துள்ளது.
மோனிஷா
கிரேன் மூலம் முதல்வரின் தங்கையை தூக்கி சென்ற காவல்துறை!
ராகிங் விவகாரம் : மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம்!