அசைவ உணவின் சுவையைத் தரக்கூடியது காளான். அத்தகைய காளானைக் கொண்டு வீக் எண்ட் ஸ்பெஷலாக இந்த காளான் பிரியாணி செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள்.
என்ன தேவை?
பாசுமதி அரிசி – ஒரு கப் Mushroom Biryani Recipe in Tamil
பட்டன் காளான் – 200 கிராம் (20 காளான்கள்)
வெங்காயம் – 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்)
பிரியாணி இலை – 2
கிராம்பு – 2
ஏலக்காய் – 10
பிரியாணி மசாலா – ஒரு டீஸ்பூன்
பட்டை – 3 முதல் 4 அங்குல துண்டுகள்
அன்னாசிப்பூ – 2
கல்பாசி – 2 துண்டுகள்
பெருஞ்சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 200 மில்லி
எலுமிச்சை – பெரிய அளவு (சாறு பிழியவும்)
புதினா – 2 கைப்பிடி அளவு
கொத்தமல்லி – 2 கைப்பிடி அளவு
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 100 மில்லி
நெய் – 50 மில்லி
உப்பு – தேவையான அளவு Mushroom Biryani Recipe in Tamil
எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசியைக் கழுவி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பட்டன் காளான்களைச் சுத்தம் செய்து ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றவும். பட்டை, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கல்பாசி சேர்த்து சில விநாடிகளுக்கு வதக்கவும்.
பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து இலை சுருங்கும் வரை வதக்கவும். அடுத்து மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை காத்திருக்கவும்.
அடுத்து நறுக்கிய காளான்களைச் சேர்த்து நன்றாக வதக்கியதும் ஒன்றரை கப் தண்ணீரும் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி உப்பு சேர்க்கவும். அதில் ஊறவைத்த பாசுமதி அரிசி சேர்த்துக் கிளறவும். இப்போது அரிசி மீது சிறிதளவு புதினா, கொத்தமல்லி தூவி, குக்கரை மூடவும். குறைந்த தீயில் 10 நிமிடங்கள் கழித்து ஆவி அடங்கியதும் எடுத்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…