இருசக்கர வாகனத்தில் ஏழு குழந்தைகளை அழைத்து சென்ற தந்தையை மும்பை போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சாலை விதிகளை கடைப்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்ட விதிகளை வகுத்துள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் சாலை விதிகளை பின்பற்றாததால் விபத்துகள் ஏற்படுகிறது.

இந்தநிலையில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஏழு குழந்தைகளை அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் இரண்டு குழந்தைகள் முன் பக்கமும், மூன்று குழந்தைகள் பின் பக்க இருக்கையிலும் ஒரு குழந்தை நின்றபடியும் பயணம் செய்தனர். இந்த வீடியோவை மும்பை காவல்துறைக்கு ஒருவர் டேக் செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் குழந்தைகளை ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றது மும்பையை சேர்ந்த முன்வர் ஷா என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் தன்னுடைய நான்கு குழந்தைகளும் பக்கத்து வீட்டை சேர்ந்த மூன்று குழந்தைகளையும் அழைத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் அவர் கூறினார்.
இதனால் முன்வர் ஷா மீது மரணத்தை உண்டாக்க முயற்சித்தல் 308 பிரிவின் கீழ் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
செல்வம்
செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறையிடம் ஆதாரம் கேட்கும் என்.ஆர்.இளங்கோ
மதுரை பேருந்து நிலையம் ஆய்வு: மத்திய அமைச்சர் அதிரடி உத்தரவு!