Multani Mitti uses and benefits

பியூட்டி டிப்ஸ்:  கோடையில் குளுமையைத் தரும் முல்தானி மிட்டி!

டிரெண்டிங்

முல்தான் என்பது பாகிஸ்தானில் உள்ள ஓரிடம். அங்குள்ள எரிமலை வெடிப்பிலிருந்து வந்து பல வருடங்கள் பாறையாக இருந்து அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் முல்தானி மிட்டி.

நெசவுத் தொழிலாளர்கள் புதிதாக நெய்த துணிகளில் உள்ள அழுக்குகளை நீக்க முல்தானி மிட்டியைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் உண்டு. அந்த அளவுக்கு அதற்கு சுத்திகரிக்கும் தன்மை உண்டு.

பல வருடங்களுக்கு முன்பாகவே முல்தானி மிட்டியை சருமத்துக்குப் பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது. முல்தானி மிட்டியில் தாதுச்சத்துகள் அதிகமிருக்கும்.

எனவே, பருக்கள் உள்ளவர்களும், அதிக எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்களும் இதை முகத்துக்கான பேக்காக பயன்படுத்தும்போது நல்ல பலன்களைத் தரக்கூடியது.

இது எல்லாவிதமான சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்றதா? யார், யார்… எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

எண்ணெய்ப்பசையான சருமம் உள்ளவர்கள், முல்தானி மிட்டியை ரோஸ் வாட்டருடன் கலந்து பயன்படுத்தலாம். முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்கலாம். முழுவதும் காயவிட வேண்டாம். முழுக்க காயவிட்டால், அது சருமத்திலுள்ள ஈரப்பதத்தை எடுத்துவிடும்.

லேசான ஈரப்பதம் இருக்கும்போதே, விரல் களை தண்ணீரில் தொட்டு பேக்கை அகற்றிவிடலாம் வாரம் இரண்டு நாட்கள் இப்படிச் செய்யலாம். உடனடியாக பருக்களின் தீவிரம் குறையும். இதிலுள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை காரணமாக பருக்கள் பரவாமல் தடுக்கும். சருமத்தின் இறந்த செல்கள் நீங்கும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் நான்கைந்து பாதாம் பருப்புகளை ஊறவைத்து, தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது முல்தானி மிட்டியும், காய்ச்சாத பாலும் சேர்த்துக் குழைத்து முகத்தில், கழுத்தில், உடல் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து கழுவிவிடலாம்.

முல்தானி மிட்டியுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்து தடவினால் சருமத்தின் கருமை நீங்கும். சரும துவாரங்கள் பெரிதாக இருந்தால், அவற்றை டைட்டாக்கும்.

வெயில் நாட்களில் இதை உபயோகிக்கும்போது குளுமையான உணர்வைத் தரும். முதுமைத் தோற்றத்தையும் விரட்டக்கூடியது. சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள், முல்தானி மிட்டியில் கூடுதலாக பால் அல்லது சிறிது தேங்காய் எண்ணெய் கலந்தும் பயன்படுத்தலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: முந்திரி சாக்கோ ரோல்

டிஜிட்டல் திண்ணை: பங்குபோடும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன்… ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய South

இனிமே விஜய் இப்படித்தான்: அப்டேட் குமாரு

பரம்பரை வரி… மக்களின் சொத்துக்களை பறிக்கும் காங்கிரஸ்: மோடி தாக்கு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *