இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இளைஞர்கள் சிலரிடம் ஊருக்கு வழி கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்த கையோடு அவரது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஞ்சியில் இருந்து அருகில் உள்ள ஊருக்குச் சென்றிருக்கிறார். அப்போது திடீரென காரை நிறுத்திய தோனி, அங்கு சென்றவர்களிடம் தான் செல்லும் இடத்துக்கான வழியை கேட்டுள்ளார்.
தோனி காரை நிறுத்தி அவர்களிடம் வழிகேட்டதை, அவர்களால் நம்ப முடியவில்லை. தோனிக்கு வழி சொன்ன அவர்கள் ஆச்சரியத்துடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தான் , அவர் வழிகேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பிராட்கேஸ்டில் பேசிய விராட் கோலி தோனியை செல்போனில் தொடர்பு கொள்வது கடினம். இந்த ஆண்டு ஏதாவது மெசேஜ் அனுப்பினால் அதற்கான ரிப்ளை அடுத்த ஆண்டு தான் வரும் என சிரித்துக் கொண்டே கூறியிருந்தார்.
இதை தற்போது தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலியின் பேச்சை நினைவு படுத்தி தோனி செல்போன் அதிகம் பயன்படுத்த மாட்டார் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாங்குநேரி சம்பவம்: ஆகஸ்ட் 20-ல் விசிக ஆர்ப்பாட்டம்!
”உயிரைக்குடிக்கும் நீட்… தமிழ்நாடல்ல இந்தியாவுக்கே இதே நிலை தான்”- அன்புமணி
பாஜக பேரணி: காவல்துறை அனுமதி மறுப்பு!