குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க நீங்க ஆசைப்படுறீங்களா.. அப்படின்னா இந்த ஸ்மார்ட் போன் குறித்த அறிவிப்பு உங்களுக்கு தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன் விற்பனையை கடந்த சில ஆண்டுகளாக தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 9ம் தேதி ஜி-சீரிஸ் தயாரிப்பான Moto G32 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையாகி வருகிறது.
அதனைத் தொடர்ந்து மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி-சீரிஸின் அடுத்த தயாரிப்பான Moto G62 ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்கிறது. அடுத்த தலைமுறையான 5ஜி தொழில்நுட்ப வசதியுடன் Moto G62 சந்தைக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஐரோப்பாவில் இந்த ஸ்மார்ட்போன் முதன்முதலில் வெளியிடப்பட்டது. அங்கு Moto G62 5G யின் விலை EUR 270 (தோராயமாக ரூ. 21,900) முதல் தொடங்கியது. அதன்படி, இந்தியாவில் Moto G62 விலை ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. கருப்பு மற்றும் பச்சை என இரு நிறங்களில் தற்போது அறிமுகமாகிறது.

Moto G62 சிறப்பம்சங்கள் என்ன?
- மோட்டோ G62 5G ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் Snapdragon 480+ SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தியாவில் இது சற்றே சக்தி வாய்ந்த ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 மூலம் இயக்கப்படலாம்.
- இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ராவைடு கேமரா (இது டெப்த் சென்சார் ஆகவும் செயல்படும்) + 2எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது. கூடுதலாக, செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஸ்மார்ட்போன் 16MP முன் கேமரா வசதியை பெற்றுள்ளது.

- இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி உள்ளது.
- Moto G62 5G ஆனது 2400 x 1080 பிக்சல் ரெசொல்யூஷன் மூலம் தத்ரூபமான திரை அமைப்பை பயனர்களுக்கு வழங்கும். மேலும் இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் முழு HD+ IPS LCD டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.
- இது 4 ஜிபி ரேம் வசதியையும், 128 ஜிபி சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டின் உதவியுடன் சேமிப்பு வசதியை அதிகப்படுத்த முடியும்.
கிறிஸ்டோபர் ஜெமா
ட்விட்டர் தொடுத்த வழக்கு: 6.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்ற எலான் மஸ்க்