குன்னூர் அருகே வனத்துறை விரட்டிய போது சாலையை கடக்க முடியாமல் திணறிய குட்டி யானைகளை தாய் யானைகள் திரும்பி வந்து கூட்டிச் சென்ற காட்சி வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் 26 நாட்களுக்கு மேலாக ஒன்பது யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த யானைகள் காட்டேரி, உலிக்கல் உள்ளிட்ட பல இடங்களில் சென்று வாழை மரங்களை ருசி பார்த்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று(ஜனவரி 7) அதிகாலை காட்டேரி அருகே உள்ள டேன் டீ குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானை கூட்டம் அங்கிருந்த வாழை மரங்களை ருசி பார்த்தன.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பாதுகாப்பு கருதி யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்பது யானைகளில் நான்கு யானைகள் மட்டும் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சென்றன.
ஆனால் அவற்றின் குட்டிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து நின்றன. அப்போது சாலையை கடந்த நான்கு யானைகளும் சில நிமிடங்களில் மீண்டும் திரும்பி வந்து சாலையை கடந்து குட்டிகளிடம் சென்றன.
இதையடுத்து அந்த தாய் யானைகள் தங்கள் குட்டிகளை பத்திரமாக சாலையை கடக்க வைத்து கூட்டிச் சென்றன.
தற்போது வனத்துறையினர் அவற்றை குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கலை.ரா
தமிழகத்தில் 67 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு!
சாதிவாரி கணக்கெடுப்பு: பாராட்டிய ராமதாஸ்