பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்: பிரபல ஓடிடி நிறுவனம் அதிரடி!

Published On:

| By christopher

அடுத்த ஆண்டு முதல் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் பயனர் தனது பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கொரோனோவுக்கு பிறகு உலகம் முழுவதும் ஓடிடி தளத்தின் பயன்பாட்டின் உச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா தாக்கத்தின்போது உலகளவில் திரைப்படங்கள் பெரும்பாலும் ஓடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றில் வெளிவந்தன.

காலச் சூழலுக்கேற்ப தொழில்நுட்பத்தின் இந்த வளர்ச்சி ஓடிடி தளங்களின் பயன்பாட்டு தேவையை அதிகப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் பல்வேறு சலுகைகளுடன் வந்த ஓடிடி தளங்கள் இன்று சேவையை பயன்படுத்துவதற்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்து வருகின்றன.

more charge for netflix password sharing

அடுத்த ஆண்டு முதல் அமல்!

அந்த வகையில் பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால் 2023ம் ஆண்டு முதல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலவசமாக பாஸ்வேர்டு பகிர்தலை நிறுத்தவும், துணைக் கணக்குகளுக்கு அதிக கட்டணம் செலுத்த பயனர்களை கட்டாயப்படுத்தவும் இந்த திட்டத்தை நெட்பிளிக்ஸ் பரிசோதித்து வருகிறது.

பயனர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் நெட்பிளிக்ஸ் கணக்கைப் பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டிய ஒரு வழிமுறையை நிறுவனம் வெளியிடும் என்று நீண்ட காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

more charge for netflix password sharing

கடிதத்தில் வந்த உறுதித் தகவல்!

சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட இத்தகைய அறிவிப்பில் எப்போதிருந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்லப்படவில்லை.

இந்நிலையில் தனது முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று நெட்பிளிக்ஸ் உறுதிபடுத்தியுள்ளது.

அதில், ”பயனர் தனது பாஸ்வேர்டு பகிர்வை பணமாக்குவதற்கான சிந்தனைமிக்க அணுகுமுறையில் இறங்கியுள்ளோம். மேலும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதை இன்னும் விரிவாக வெளியிடத் தொடங்குவோம்.” என்று நெட்பிளிக்ஸ் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.

more charge for netflix password sharing

கட்டணம் எவ்வளவு?

தற்போது இந்த அம்சம் சிலி, கோஸ்டாரிகா மற்றும் பெருவில் உள்ளிட்ட சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

​​இந்த புதிய கூடுதல் கணக்குக் கட்டணங்களின் விலையை நெட்பிளிக்ஸ் இன்னும் குறிப்பிடவில்லை.

எனினும் ஒவ்வொரு கூடுதல் சந்தாதாரருக்கும் மூல பயனரின் நெட்பிளிக்ஸ் தொகுப்பின் அடிப்படை விலையில் நான்கில் ஒரு பங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

திடீரென உயர்ந்த தியேட்டர் டிக்கெட் கட்டணம்!

பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share