monkeys sleeping in pond video

எப்பா…. என்ன வெயிலு: குளித்துக் கொண்டே உறங்கும் குரங்குகள்!

டிரெண்டிங்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் 3 குரங்குகள் குளத்தில் குளித்துக் கொண்டே தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு இயல்பை விட வெப்பம் தினசரி 2 முதல் 4 டிகிரி அதிகமாக இருந்து வருகிறது.

இந்த வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்வது, வெளியே செல்லும் போது குடைகளை எடுத்துச் செல்வது என முன்னெச்சரிக்கையாக இருக்கின்றனர்.

வெயிலின் தாக்கம் மனிதர்களை பாதிப்பது போல் விலங்குகளையும் பாதித்து வருகிறது. விலங்குகள் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஏதாவது நீர்நிலைகளைப் பார்த்தால் அங்கேயே முகாமிட்டு விடும்.

அந்த வகையில் நீர் தேங்கியிருக்கும் பகுதியில் சில குரங்குகள் அமர்ந்து நீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருக்கின்றன. அதில் 3 குரங்குகள் மட்டும் நீருக்குள் இருந்து கொண்டே அருகில் இருக்கும் கான்கிரிட் தரையின் மீது கையை வைத்துக் கொண்டு உறங்கி கொண்டிருக்கின்றன.

இந்த க்யூட்டான வீடியோவை சமூக வலைத்தள பயனாளி ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“குரங்குகள் சேட்டை செய்து தான் பார்த்திருக்கிறேன். குரங்குகள் சமத்தாக இருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்”. “நான் இதுபோன்று ஓய்வு எடுத்ததே இல்லை”, “இது போன்ற வசதிகள் பெரிய விடுதிகளில் கூட கிடைப்பதில்லை” என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் .

குளித்துக் கொண்டே அசதியில் உறங்கும் குரங்குகளின் வீடியோ 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மோனிஷா

தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

பட்டப்பகலில் விஏஓ படுகொலை: 4 தனிப்படைகள் அமைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0