உணவளித்தவரின் இறுதிச்சடங்கு: கண்ணீர் சிந்திய குரங்கு

Published On:

| By Monisha

Monkey Attends Funeral Of Human Friend

உத்தரப்பிரதேசத்தில் குரங்கு ஒன்று தனக்கு இரண்டு மாதங்களாக, உணவளித்து அன்பு செலுத்தியவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு கண்ணீர் சிந்தியது பலரை நெகிழவைத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்குன்வர் சிங் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக குரங்கு ஒன்றுக்கு உணவளித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது அவர் அந்த குரங்குடன் சிறிது நேரம் செலவிட்டு விளையாடி வருவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று ராம்குன்வர் சிங் உயிரிழந்தார். வழக்கமாக உணவளிப்பவர் இன்று வரவில்லை என்பதை அறிந்த அந்த குரங்கு, ராம்குன்வர் சிங் இறுதிச்சடங்கு நடந்த, டிகிரி தம் என்ற இடத்துக்கே வந்துவிட்டது.

அப்போது, இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருக்கும்போது, இறந்த ராம்குன்வர் சிங் உறவினர்களுடன் சேர்ந்து அவரின் சடலத்தின் அருகே குரங்கு சோகமாக அமர்ந்திருந்த காட்சி, காண்போரை சோகத்தோடு நெகிழ வைத்துவிட்டது.

இறுதிவரை இருந்து இறுதி அஞ்சலி செலுத்தியது மட்டுமல்லாமல், ராம்குன்வர் சிங்கின் சடலத்தை எடுத்துச் செல்லும்போது குரங்கு கண்ணீர் சிந்தியதும், சடலத்தை எடுத்துச் செல்வதை தடுத்ததும் மனதை உறைய வைத்துவிட்டது.

ஒரு மனிதன் சக மனிதன்மீது காட்டும் அன்பு, அக்கறையைவிடவும், கொஞ்சகாலம் காட்டிய அன்புக்காக வந்து கண்ணீர் சிந்திய அந்த குரங்கின் காட்சிகள் இணையத்தில் வீடியோவாக, பல மனிதர்களை நெகிழ வைத்துக்கொண்டிருக்கிறது.

ராஜ்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மக்ரோனி சூப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share