டி20: பாகிஸ்தான் தோல்வி-அக்தருக்கு ஷமி கொடுத்த பஞ்ச்!

டிரெண்டிங்

டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றிய பிறகு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடையே ட்விட்டரில் ஏற்பட்ட் வார்த்தைப் பரிமாற்றங்கள் ட்ரெண்டிங் ஆகியுள்ளன.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 16வது ஓவரிலேயே தனது இலக்கை அடைந்து ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவோ இல்லை மெல்போர்ன் வரை விமானத்தில் வரவோ தகுதியில்லை எனவும் ,

முகமது ஷமி ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் தான். ஆனால் , அவருக்கு டி 20 உலகக்கோப்பை அணியில் இருப்பதற்கு தகுதியில்லை என்றும் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்று (நவம்பர் 13) இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 19வது ஓவரிலேயே இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
குறிப்பாக இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸும் பந்துவீச்சில் சாம் கரனும் அதிரடி காட்டினர்.

இந்த வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லையே என்று ரசிகர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் வீரர்களும் வருந்தினர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதற்குப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ’உடைந்த இதயத்தை’ ட்விட் செய்திருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவிற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரீட்வீட்டில் “மன்னிக்கவும் சகோதரா, இதை தான் கர்மா என்று அழைப்பார்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த இரண்டு ட்விட்டர் பதிவுகளும் சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் ரசிகர்கள் இடையே பரவ தொடங்கியது.

முகமது ஷமியின் ட்விட்டர் பதிவுக்கு சோயிப் அக்தர் பதிலளித்திருந்தார். அவர் இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவின் புகைப்படம் மற்றும் ”பாகிஸ்தானுக்கு பாராட்டுகள். சிறந்த பந்துவீச்சு அணி” என்ற ட்விட்டர் பதிவையும் பதிவிட்டிருந்தார்.

பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரருக்கு இடையே ஏற்பட்ட இந்த ட்விட்டர் வாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மோனிஷா

அல்லாஹு அக்பர் கோஷம் : மாணவர் மீது தாக்குதல்!

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் செல்போன்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

+1
0
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *