பஞ்சாப் கலைஞர்களை நடனமாட சொல்லி கண்டு ரசித்த மோடி

டிரெண்டிங்

நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார்.

அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் பிரதமருக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்று நாம் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய சவால்கள், ஒன்று ஊழல் மற்றொன்று குடும்ப அரசியல். இவற்றுக்கு எதிராக போராட வேண்டும்” என்றார்.

பிரதமர் பேசியதற்கு பின்னர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருந்து கலைஞர்கள் அனைவரும் அவர்களது பாரம்பரிய உடையில்  வந்திருந்தார்கள்.

கலைஞர்கள் அனைவரும் இந்திய வரைபடம் போல ஒன்றாக இணைந்து நின்றனர். இது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. அப்போது கலை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, அனைவரையும் பார்த்து கையசைத்து, சுதந்திர தின வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

இதையடுத்து அங்கு இருந்த பஞ்சாபி கலைஞர்களை பார்த்து நடனமாட சொல்லி கண்டுகளித்தார். அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வம்

விருதுதொகையை திருப்பி அளித்த தகைசால் தமிழர் நல்லக்கண்ணு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.