ஜி20 மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்த தலைவர்களுக்கு வரவேற்பு மேடையில் காட்சிப்படுத்தப் பட்டிருந்த புராதன சின்னம் குறித்து விளக்கம் அளித்தார் பிரதமர் மோடி.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
டெல்லியில் இன்றும் நாளையும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக இன்று காலை முதல் கூட்டத்திற்கு வருகை தந்த தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்பு மேடையில் நின்று கை குலுக்கி வரவேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்ற பிரதமர் மோடி வரவேற்பு மேடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கோனார்க் சக்கரம் குறித்து விளக்கம் அளித்தார். அதனை கேட்ட ஜோ பைடன் சிரித்துக் கொண்டே மாநாட்டு அரங்கிற்குள் சென்றார்.
PM Modi welcomes US President Joe Biden at G20 Summit Venue
Read @ANI Story | https://t.co/8fsXb0wla8#G20India2023 #PMModi #JoeBiden #BharatMandapam pic.twitter.com/YpLfUYF7cA
— ANI Digital (@ani_digital) September 9, 2023
ஒரிசா மாநிலத்தில் வங்கக் கடலோரம் கோனார்க் என்ற இடத்தில் சூரிய கோவில் இருக்கிறது. இந்தியாவில் சூரிய பகவானுக்காக கட்டப்பட்ட முதல் கோவிலாகவும் இந்த கோனார்க் சூரிய கோவில் கருதப்படுகிறது.
13 நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை பார்த்தால் இப்படி ஒரு கட்டட அமைப்பா என்று நாம் வியந்து போவோம். கோயிலின் முகப்பு கிழக்கு நோக்கி இருப்பதால் சூரியன் உதிக்கும்போது அதன் முதல் கதிர்கள் கோயிலின் பிரதான நுழைவாயிலில் விழும்.
இந்த கோவிலில் சூரியனின் ரதத்தில் உள்ள சக்கரங்கள் மற்றும் குதிரைகளின் சிற்பங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோனார்க் கோவிலில் உள்ள சக்கரம் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் 10 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கோவிலை சுற்றி மொத்தம் 24 சக்கரங்கள் உள்ளன. சூரிய கடிகாரத்தைக் குறிக்கும் இந்த சக்கரங்களால் நேரத்தை துல்லியமாகத் தெரிந்து கொள்ளவும் முடியும்.
இப்படி பல சிறப்புகளை கோனார்க் சூரிய கோவில் பெற்றுள்ளது. இந்தியாவில் முக்கிய சுற்றுலா தலமாகவும் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் சக்கரங்கள்தான் ஜி 20 மாநாட்டின் வரவேற்பு மேடையின் பின்னணியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தான் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் விளக்கினார்.
மோனிஷா
”எந்த ஜனநாயக நாட்டிலும் இது நடக்காது”: மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்!
தொகுதி வாரியாக நியமனம்: விஜய் மக்கள் இயக்க மகளிரணி கூட்டத்தில் முடிவு!