பற்கள் சீரான வரிசையில் இல்லாமல் முன்னும் பின்னுமாக இருந்தால், முன்பெல்லாம் கம்பி வைத்து நேராக்குவதும், உலோகத்தால் ஆன பிரேசஸ் பொருத்துவதும் (சின்னச் சின்ன உலோக கியூப்களை பற்களோடு பொருத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஒயருடன் இணைத்து கம்பியால் பற்களை இழுத்துச் சீரமைக்கும் முறை) வழக்கத்தில் இருந்தது. Modern treatment for crooked teeth
இதன் மூலம் சீரற்ற பற்களை ஒழுங்குபடுத்துவதும், மேலும் கீழுமாக உள்ள பற்களை சீராக்குவதும் செய்யப்பட்டது.
ஆனால், அவை பார்ப்பதற்கு உறுத்தலாகத் தெரிவது, சிரிக்கும்போது சங்கடத்தை ஏற்படுத்துவது, சுத்தப்படுத்துவதில் சிரமம் என உலோக பிரேசஸ் பொருத்துவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருந்தன.
உணவுத்துகள்கள் உள்ளே சிக்கிக்கொள்ளும். எல்லா உணவுகளையும் சாப்பிடுவதிலும் அசௌகர்யம் இருந்தது. மெட்டல் கிளிப்பும் ஒயரும் குத்தி வாயில் புண்கள் வரும் வாய்ப்பும் ஏற்பட்டது.
இதற்கு மாற்றாக செராமிக் பிரேசஸ் வந்தன. பார்ப்பதற்கு பற்கள் போலவே இருக்கும். ஒவ்வொரு பல்லுடனும் பொருத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஒயருடன் இணைத்து எலாஸ்டிக் பேண்டு மூலம் இழுத்துப் பொருத்துவார்கள்.
இதிலும் பற்களில் நிற மாற்றம், எலாஸ்டிக் பேண்டு பிய்ந்து போவது, ஒயர் குத்துவது போன்ற பிரச்சினைகள் இருந்தன.
இதற்கு அடுத்து வந்தவைதான் இன்விசிபிள் பிரேசஸ். இவற்றை இன்விசிபிள் அலைனர்ஸ் என்கிறார்கள் பல் மருத்துவர்கள். பற்களின் வடிவிலேயே, டிரான்ஸ்பரன்ட்டாக இருக்கும். உயர்தர பிளாஸ்டிக்கால் செய்யப்படுவது.
இப்போது இவற்றிலேயே இன்னும் உயர்தர தயாரிப்புகள் வந்துவிட்டன. உபயோகிக்கவும் எளிதாக இருக்கும்படி தயாரிக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால் பற்களின் மேல் டிரஸ் போடுவது போன்றது இது.
இந்த இன்விசிபிள் பிரேசஸை எந்த வயதினரும் உபயோகிக்கலாம். ஆனால், பற்கள், ஈறு மற்றும் எலும்புகள் ஆகியவை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும், சொத்தையோ, எலும்புத்தேய்வோ, ஈறு பிரச்னையோ இல்லாமல் இருக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியம் பார்க்கப்பட்டு, தேவைப்படும் எக்ஸ் ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். Modern treatment for crooked teeth
பற்களின் அமைப்பில் பிரச்சினையா அல்லது தாடையிலா என்பதைப் பார்த்துவிட்டு டிஜிட்டல் ஸ்கேனிங் செய்யப்படும். அதைப் பொறுத்து எந்த மாதிரி பிரேசஸ் தேவை என்பது முடிவு செய்யப்படும்.
இன்விசிபிள் பிரேசஸை பயன்படுத்துவதும் சுத்தப்படுத்துவதும் மிக எளிது. கழன்று வராது. சாப்பிடும்போது கழற்றி வைத்துவிட்டு, சாப்பிட்ட பிறகு மீண்டும் பொருத்திக் கொள்ளலாம். இதைப் பராமரிக்கவென மருத்துவர் சொல்லும் டிப்ஸை சரியாகப் பின்பற்றினால் போதும். இதன் விலை சற்றே அதிகம்தான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதை முன்னாடியே செஞ்சிருக்கலாமே பிக்பாஸ்? கேள்வி கேட்கும் ரசிகர்கள்!
சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் : மீண்டும் பெறுவது எப்படி?
சண்டே ஸ்பெஷல்: ரெடி டு குக் உணவுகள்… ஆபத்தை அறிந்துகொள்ளுங்கள்!
டிஜிட்டல் திண்ணை: சின்னவரை நம்பினார் கைவிடப்படார்- கண்ணப்பனை கரையேற்றிய உதயநிதி