ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை போட்டோ எடுத்தனர். கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
திரைப்பட நடிகை மற்றும் அரசியல் வாதியாக இருக்கும் எம்.எல்.ஏ ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கிறார். இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக ஒரே நேரத்தில் 3 ஆயிரம் புகைப்பட கலைஞர்களை வைத்து போட்டோ எடுக்க ஏற்பாடு செய்தார்.
இதற்காக ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரம் புகைப்பட கலைஞர்கள் விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்துக்கு நேற்று (ஜூலை 30) வருகைத் தந்தனர். அங்கு மண்டபத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள மேடையை சுற்றி தங்கள் கேமராவை தயாராக வைத்துவைத்துக் கொண்டு காத்திருந்தனர்.
இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்து மேடையில் ஏறி நின்ற ரோஜாவை “ஒன் கிளிக் ஆன் சேம் டைம்” என்ற முறையில் புகைப்பட கலைஞர்கள் அனைவரும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.
உலகத்தில் யாரும் இதுவரை இப்படி முயற்சி எடுக்கவில்லை என்பதால் அமைச்சர் ரோஜா “வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்” கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
மோனிஷா