உலக புகைப்பட தினம்: ஸ்டாலின் எடுத்த போட்டோ கிளிக்!

Published On:

| By Selvam

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

1837-ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டை சேர்ந்த புகைப்படக்காரர்கள் ஜோசப் நைஸ் ஃபோர் நீப்ஸ் மற்றும் லூயிஸ் டாகுரே இருவரும் சேர்ந்து டாகுரோடைப் புகைப்பட செயல்முறையை கண்டுபிடித்தனர். இவர்களின் கண்டுபிடிப்பை ஆகஸ்ட் 19, 1837-ஆம் ஆண்டு பிரஞ்சு அகாடமி ஆஃப் சயின்ஸ் அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு அறிவித்தது. இந்த நாளானது உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

புகைப்படக்காரர்கள் தினசரி மக்கள் படும் அவலங்களையும் பிரச்சனைகளையும் தங்களது கேமரா மூலம் காட்சிப்படுத்துபவர்கள்.

ஒரு புகைப்படத்தில் தங்களது உணர்வுகளை கதைகளாக சொல்லும் கைவண்ணம் படைத்தவர்கள் புகைப்படக்காரர்கள். உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் புகைப்பட கலைஞர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலினின் ஒவ்வொரு அசைவுகளையும் தங்களது கேமரா லென்ஸ் மூலம் படம் பிடித்து பத்திரிகை, தொலைக்காட்சிகள் வழியாக மக்களிடம் தினமும் கொண்டு செல்லும் புகைப்படக்காரர்களை முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் எடுத்ததால் மகிழ்ந்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நிகழ்வுகளை உறைய வைத்தும் நிஜங்களை கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

அலைச்சறுக்கு போட்டி: ஜப்பான் வீரர் வெற்றி!

“கலைஞரின் சாதனைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” – ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share