ட்விட்டரில் ஒரு வார்த்தை ட்விட் இன்று (செப்டம்பர் 2) டிரண்டாகி வரும் நிலையில் தற்போது இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைந்துள்ளார்.
இன்று காலை முதலே ”ஒரு வார்த்தை ட்விட்” ட்விட்டரில் டிரண்டாகி வந்தது. உலகம் முழுவதும் தனிநபர்கள் மற்றும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் அவர்களுக்குத் தொடர்புடைய வார்த்தைகளை ஒரு வார்த்தையில் ட்விட் செய்து இந்த ட்டிரண்டிங் தொடரில் இணைந்திருந்தன.
அது மட்டுமில்லாமல் நாசா, ஐசிசி ஆகிய அமைப்புகளைத் தொடர்ந்து அதிமுகவும் “எடப்பாடியார்” என்று ஒரு வார்த்தையில் ட்விட் செய்திருந்தார்கள்.
அமெரிக்காவின் ரயில் சேவை இயக்குநர் தொடங்கி வைத்த இந்த தொடர் தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தற்போது இந்த வரிசையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இணைந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “திராவிடம்” என்று குறிப்பிட்டு ஒரு வார்த்தையில் ட்விட் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரு வார்த்தை ட்விட் தொடரில் இணைந்துள்ளார். அவர் “தமிழ்த்தேசியம்” என்று ட்விட் செய்துள்ளார்.
மோனிஷா
அதிமுக முதல் அமெரிக்க அதிபர் வரை: ட்ரெண்டிங்கில் ஒரு வார்த்தை ட்விட்!