மிவி நிறுவனம் அண்மையில் இரண்டு புதிய போர்ட்டபிள் சவுண்ட்பார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
இப்போது பெரும்பாலும் டிவி களில் சப்-ஊஃபர்களுக்கு பதிலாக சவுண்ட் பார் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.அதுமட்டுமல்லாமல், டிவிகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சவுண்ட் பார்கள் ஏரளமாக விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், மிவி நிறுவனத்தின் போர்ட் S16 மற்றும் போர்ட் S24 சவுண்ட்பார் மாடல்கள் அறிமுகமாகியுள்ளது.
இந்த புதிய மிவி போர்ட் S16 மற்றும் S24 மாடல்கள் பேப்ரிக் டிசைன் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளதாக இருக்கிறது.
இதன் பேட்டரி பேக்கப் பொறுத்தவரை, 2000 எம்ஏஹெச் பேட்டரியும், போர்ட் S24 மாடலில் 2500 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் பேசிவ் ரேடியேட்டர்கள் இருப்பதால் குறைந்த பிரீக்வன்சிக்களிலும் சீரான சவுண்ட் வெளிப்படுத்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இரு சவுண்ட் பார்களும் முழு சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கான பிளேபேக்கில் இயங்கக்கூடியது.
மேலும், இந்த சவுண்ட் பாரில், ப்ளூடூத், AUX, யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளிட்ட பல்வேறு இன்புட் மோட்கள் உள்ளன. இதன்மூலம் வீட்டிலிருந்தபடியே தியேட்டர் அனுபவத்தை பெறும் படி இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனை, டிசி அடாப்டர் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.இதில் வழக்கமாக கொடுக்கப்படும், வால்யூம், பிளே, பாஸ், டிராக் கண்ட்ரோல் போன்ற கண்ட்ரோல்கள் உள்ளன. இத்துடன் ஹேண்ட்ஸ்-ஃபிரீ அசிஸ்டண்ட், எப்.எம். ரேடியோ, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி, AUX மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மிவி போர்ட் S16 மற்றும் போர்ட் S24 சவுண்ட்பார்கள் ப்ளிப்கார்டில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ.1,599 முதல் ரூ.1,799 என விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாய்ஸ்ஃபிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச்: அசத்தும் அம்சங்கள் : என்னென்ன தெரியுமா?