வீக் எண்டில் ஓய்வாக இருக்கும் நிலையில் உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் டேஸ்ட்டியான, தொண்டைக்கு இதமான இந்த ஹெல்த்தி டிரிங்க் செய்து பருகலாம். குளிர்காலத்துக்கேற்ற சூப்பர் டிரிங்க் இது.
என்ன தேவை?
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
புதினா – 10 இலைகள்
வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
தூதுவளை – 4 இலை
துளசி – 3 இலை
துருவிய வெல்லம் – அரை டீஸ்பூன்
பட்டை – சிறிது
கிராம்பு – ஒன்று
எப்படிச் செய்வது?
கழுவி தோல் சீவி தட்டிக்கொள்ளவும். அதனுடன், கழுவிய புதினா, தூதுவளை, துளசி இலைகள், பட்டை, கிராம்பு சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, அனைத்து சாறும் நீரில் இறங்கி நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டவும். பிறகு, வெள்ளை மிளகுத்தூள் தூவி, வெல்லத்துருவல் சேர்த்துக் கலந்து பருகவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கார பிஸ்கட்!