இந்தியாவில் 3 மாதங்களில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.
இது தொடர்பாக யூடியூப் நிறுவனம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உலகம் முழுவதிலும் 64.8 கோடி வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது.
இந்தியாவில் இதே காலகட்டத்தில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் இடையே நீக்கப்பட்ட வீடியோக்கள் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் ஆகும்.
அமெரிக்காவில் 6 லட்சத்து 54,968 வீடியோக்களும், ரஷ்யாவில் 4 லட்சத்து 91,933 வீடியோக்களும் பிரேசிலில் 4,49,759 வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஒரு நிறுவனமாக ஆரம்ப நாட்களில் இருந்து, எங்களின் சமூக வழிகாட்டுதல்கள் யூடியூப் ( YouTube )சமூகத்தை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாத்து வருகின்றன.
இயந்திரப் பயன்பாடு மற்றும் விமர்சனங்கள் அடிப்படையில் எங்களின் கொள்கைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
பல ஆண்டுகளாக, சமூகத்தைப் பாதுகாக்கத் தேவையான கொள்கைகள் மற்றும் தயாரிப்புகளில் அதிக அளவில் நாங்கள் ( YouTube ) முதலீடு செய்துள்ளோம். இன்று பெரும்பான்மையான கிரியேட்டர்கள் நல்ல எண்ணத்தில் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர்.
அவர்கள் எங்கள் கொள்கைகளை மீறுவதில்லை. அதேநேரம் வேண்டுமென்றே எங்கள் கொள்கைகளை மீறும் கிரியேட்டர்களின் எண்ணிக்கையை குறைப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று நம்புகிறேம்.
சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக 2023 ஆம் ஆண்டின் 8.7 மில்லியன் சேனல்களை YouTube அகற்றியுள்ளது.
இந்தச் சேனல்களில் பெரும்பாலானவை எங்கள் ஸ்பேம் கொள்கைகளை (spam policies) மீறியதற்காக நிறுத்தப்பட்டவை தான்.
இதில் ஸ்கேம்கள் (scams) , தவறாக வழிநடத்தும் மெட்டாடேட்டா (misleading metadata ) சிறுபடங்கள் ( thumbnails ) வீடியோ மற்றும் ஸ்பேம் கருத்துகள் ( comments spam ) அடங்கும். 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 853 மில்லியனுக்கும் அதிகமான கருத்துகளை எங்கள் நிறுவனம் அகற்றியுள்ளது. அதில் பெரும்பாலானவை ஸ்பேம் கருத்துகள் தான்”என்று யூடியூப் கூறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உச்சநீதிமன்றத்தில் காவிரி ஆணையம் அறிக்கை தாக்கல்!
அதிமுக மாநாட்டில் கூடிய கூட்டம் பணத்துக்கானது : அண்ணாமலை
சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ சேவை!
வெட்கி தலை குனியக் கூடிய செய்தி: தினமலர்