பியூட்டி டிப்ஸ்: மீண்டும் டிரெண்டாகும் மிடி … உங்களுக்கேற்றது எது?

Published On:

| By Kavi

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டிரெண்டாகியிருக்கிறது மிடி டிரஸ். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மிடி டிரஸ்ஸை தேர்வு செய்வது எப்படி, எந்த இடத்துக்கு, எந்த மாதிரியான மிடி டிரஸ் பொருத்தமாக இருக்கும், இதை அணியும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்த தகவல்களை வழங்குகிறார்கள் ஃபேஷன் டிசைனர்ஸ்.

‘’மிடி டிரஸ் என்பது தனியாக அணிய வேண்டிய ஆடை. இத்துடன் லெகின்ஸ், துப்பட்டா அணிவதைத் தவிர்க்க வேண்டும். முழங்கால் அளவுக்கு ஷார்ட்ஸ் அணிந்து அதற்கு மேல் மிடி டிரஸ் அணியலாம்.

மிடி டிரஸ்ஸை கேஷுவல், இண்டோ வெஸ்டர்ன், டிரெடிஷனல் என உங்களுக்கு பிடித்தபடி ரீ கிரியேட் செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு டிரெடிஷனல் லுக் பிடிக்கும் எனில் ரா சில்க், பனராஸி, சில்க் காட்டன் போன்ற துணி ரகங்களில் மிடி டிரஸ்ஸை வடிவமைத்துக் கொள்ளலாம்.

ஸ்லீவ், யோக், நெக் பகுதிகளுக்கு மட்டும் கான்ட்ராஸ்ட் நிறங்களைத் தேர்வு செய்யலாம்.

கான்ட்ராஸ்ட் நிறங்களை பயன்படுத்தும் இடத்தில் நெட்டடு, கலம்காரி போன்று வேறு துணி ரகங்களையும் பயன்படுத்தலாம்.

அலுவலகப் பயன்பாட்டுக்கு காட்டனில் சிங்கிள் நிற மிடி டிரஸ் பொருத்தமான சாய்ஸ். அலுவலகத்துக்கு அணியும்போது லெதர் ஜாக்கெட், ஓவர் கோட் போன்றவற்றை மிக்ஸ் மேட்ச் செய்யலாம்.

கேஷுவல் லுக் பிரியைகள் எனில் பிரின்ட்டடு மெட்டீரியல், க்ரஷ் காட்டன் மெட்டீரியல், ஜார்ஜெட் மெட்டீரியல்களை தேர்வு செய்யலாம்.

காலர் நெக்லைன் வைத்து, முன்புறம் கழுத்திலிருந்து வயிற்றுப்பகுதி வரை பட்டன் வைத்து ஷர்ட் வெயிஸ்ட் (Shirtwaist) டிசைனில் வடிவமைக்கும் மிடி டிரஸ் உங்களை கூல் லுக்கில் காட்டும். ஷூ மிக்ஸ் மேட்ச் செய்தால் கூடுதல் அழகாக இருக்கும்.

நெக் பேட்டர்னில் பீட்டர் பேன், போட் நெக் எனவும், ஸ்லீவ்களில் ரஃபில், பெல் ஸ்லீவ் போன்றவற்றையும் தேர்வு செய்யலாம்.

பருமனான பெண்கள் ஸ்ட்ரெயிட் கட் வடிவத்தையும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் இடுப்புப்பகுதியில் ஃப்ரில் வைத்தும் உங்கள் ஆடையை வடிவமைத்தால் அழகாக இருக்கும்.

உங்கள் மிடி டிரஸ்ஸில் முழங்காலில் இருந்து 2 செ.மீ கீழாகவும், கணுக்காலில் இருந்து 5 செ.மீ மேலாகவும் இருப்பதுபோல் வடிவமைத்து, ரஃபில் வைத்துத் தைத்தால் டிரெண்டியாக இருக்கும்.

கூடுதலாக அதே மெட்டீரியலில் பெல்ட் வடிவமைத்து இடுப்புப் பகுதியில் அணிந்து கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பக்கோடா! 

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் : இந்தியா சாதனை!

ஆளுநர் பதவி முக்கியம் போல : அப்டேட் குமாரு

2025 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள், பரிகாரங்கள் : மீனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share