ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஷூக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்த வாரம் முதல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு மாத சந்தா வசூலிக்கப்படும்.
இணையத்தில் மாதத்திற்கு 11.99 டாலர் மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் மாதத்திற்கு 14.99 டாலர் சந்தா வசூலிக்கப்படும். ப்ளூ டிக் பெற விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டையை சமர்ப்பித்து ப்ளூ டிக் பெறலாம்.
இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ப்ளூ டிக் பெறுவதன் மூலம் பயனர்கள் கூடுதல் பாதுகாப்பை பெறுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
மெட்டாவின் இந்த அறிவிப்பு குறித்து ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்த மீம்ஸ் புகைப்படத்திற்கு எலான் மஸ்க் சிரிக்கும் ஸ்மைலியை பகிர்ந்துள்ளார். இந்த மீம்ஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்வம்
”மயில்சாமி கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்”: ரஜினிகாந்த்
மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை!