இன்னைக்கு நம்ம மோடி உபில இருக்கிற அவரு சொந்த தொகுதியான வாரணாசில புதுசா ஒரு கிரிக்கெட் கிரவுண்டுக்கு அடிக்கல் நாட்டியிருக்காரு….
அதுல பிரம்மாண்ட உடுக்கை வடிவத்துல முகப்பு… படித்துறை வடிவத்துல சீட்டு, திரிசூலம் வடிவத்துல லைட்ஸ், சிவன் தலையில் இருக்கும் பிறை வடிவத்துல ஸ்டேடியம் என்பது மாதிரி முழுக்க முழுக்க சிவனோட அம்சத்துல கட்டப்போறாங்களாம்…
சந்திரயான் போன நிலவுக்கே சிவசக்தின்னு பேர் வச்சாசி… வாரணாசில சொல்லவா வேணும்…
அதெல்லாம் சரி, கிரிக்கெட் விளையாடும்போது பாலுக்கு பதில் பாம்பை விட்டுற கூடாது… இப்பவே கொஞ்சம் திக் திக்னு தான் இருக்கு!
நீங்க கூலா அப்டேட்ஸ் பாருங்க!
Kirachand
புரட்டாசி மாசம் வேகமாக போகிறதே என்று ஆடுகளுக்கு கவலை…
இன்னும் போக மாட்டேங்குதே என்று மனிதனுக்கு கவலை…
சரவணன். 𝓜
அவளின் உருட்டில் தோற்றது மோடி வடைகள்
ℳsd ❝இதயவன்❞
அடுத்தவங்களை பார்த்து பொறாமை படக்கூடாது. நாம என்ன செய்கிறோம் நாம என்ன சாதிக்கிறோம் என்பதில் தான் தெளிவாக இருக்க வேண்டும்~ எஸ்.வி.சேகர்
வருஷத்துக்கு 7 கட்சி மாறின சாதனையை பத்தி சொல்றாராமாம்?
balebalu
வாரணாசி கிரிக்கெட் மைதானம் கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு அமைய உள்ளது – செய்தி
அப்போ ப்ளேயேர்ஸ் நிஜமாவே ‘ருத்ர தாண்டவம்’ ஆட போறாங்களோ?
கடைநிலை ஊழியன்
அண்ணாமலையை மாற்ற வேண்டும் – அதிமுக வலியுறுத்தல் #
பாஜக தலைமை – மாத்திருவோம்.. மாத்திருவோம்.. உங்க எல்லாத்துக்கும் தலைவரா மாத்திருவோம்..
கோழியின் கிறுக்கல்!!
‘ஆளுமை’ன்னு போனவர்களை,
ஆளையே பார்க்க முடியாதுன்னு அனுப்பிட்டாங்களாம்!!
Kirachand
சிவனின் நகரமான வாரணசியில் அமையவுள்ள இந்த கிரிக்கெட் மைதானம் சிவனுக்கு அர்ப்பணிக்கப்படும்! – பிரதமர் மோடி
சிவன் : எனக்கே வடையா?
balebalu
ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்
உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்
புதிய பாராளுமன்றத்தில் அநாகரிக வாரத்தைகளை பேசும் எம்பி க்கள்
லாக் ஆஃப்
உதயநிதியின் சனாதன பேச்சு: ஜம்மு நீதிமன்றம் உத்தரவு!
டிஜிட்டல் திண்ணை: காத்திருந்த அதிமுக… மும்பை பறந்த அமித்ஷா… டெல்லியில் நடந்தது என்ன?