அமித் ஷா பொதுவாத்தான் கூப்பிட்டாரு யாரு பேரைச் சொல்லியும் கூப்பிடலைனு அண்ணாமலை சொல்றாரு… ஆனா நம்மூர்ல வந்து நின்னுக்கிட்டு பொதுவா கூப்பிட்டேனு சொன்னா என்ன அர்த்தம், கூட்டத்துல நாங்கதானே மெயினா நிக்கிறோம்னு அதிமுக காரங்க சொல்றாங்க. அண்ணன் எடப்பாடியோ… அவர் கூப்பிட்டதை நான் பாக்கவே இல்லையேனு சொல்லிட்டாரு.
அந்த கதவு மெல்லத் திறக்குதோ மூடுதோ பூட்டு போடுறீங்களோ சாவி போடுறீங்களோ… ஜனங்க ஓட்டு போடும்போது எல்லாம் தெரியும்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
Kirachand
பாஜக கூட்டணிக்கான அதிமுக கதவு மூடப்பட்டு விட்டது! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
‘தட்டுங்கள் திறக்கப்படும்’னு முன்னாடி போர்டு வச்சிருக்கீங்கதானே?
நெல்லை அண்ணாச்சி
கூட்டணிக்காக பாஜக கதவுகள் ” திறந்தே ” இருக்கின்றன.!! அமித்ஷா
# கிண்டல்தானே…ஜி
balebalu
LIVE-IN உறவுமுறை – பதிவு செய்வது கட்டாயம் – உத்தரகாண்டில் சட்டம்!
அதுக்கு மேள தாளத்தோட கல்யாணமே பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிக்கலாமே … என்ன சொல்ல வர்ராங்க…
பர்வீன் யூனுஸ்
15 நாள்களுக்கு ஒரு முறை தவறாமல் வரும் செய்தி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிப்பு என்பது தான்.
சரவணன். 𝓜
’எங்கள் வரி எங்கள் பணம்’ என்பதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு! – பிரதமர் மோடி!
வரியை ஒழுங்கா பிரிச்சு கொடுத்தா அவங்க ஏன்யா இப்படி பேச போறாங்க..
balebalu
நாங்கதான் கதவை சாத்திட்டோமே
எப்படி உள்ளே வருவீங்க…
ED , IT ரெய்டு , வழக்கு ன்னு என் கிட்டத்தான் பல சாவிகள் இருக்கே
சரி ஆரம்பிப்போம் 🤪#RoseDay pic.twitter.com/pIvMk17tKO
— black cat (@Cat__offi) February 6, 2024
ச ப் பா ணி
பத்து மீட்டர் இடைவெளி விட்டு வரவும் எனும் விதியை கடைபிடிப்பது கம்பி லாரிக்கு மட்டுந்தான் பொருந்துகிறது
Mannar & company
காதலிக்கும்போது எதிர்காலத்தை நோக்கி சென்ற நினைவுகள்,
கல்யாணத்திற்கு பிறகு கடந்த காலத்தை நோக்கி சென்றுவிடுகிறது!
எங்கே கூட்டணி,
எங்கே கூட்டணி,
அங்கே எனக்கொரு seat வேண்டும்,
அங்கே எனக்கொரு seat வேண்டும்! https://t.co/8hLaahxRBL pic.twitter.com/VgJxT6i5jc— Prakash (@Hereprak) February 7, 2024
சரவணன். 𝓜
வரும் பிப்ரவரி 14 அன்று ஐபோன் 14 + 1 டைரி மில்க் சாக்லேட் தரும் ஆளுடன் மட்டுமே காதல் கூட்டணி – கேர்ள் பிரண்ட் அறிவிப்பு
balebalu
கர்நாடகாவில் எய்ம்ஸ் அமைக்கவில்லை என்று காங்கிரஸ் போராட்டம் – செய்தி
மத்திய அரசு நவ் : கர்நாடகாவுக்கு ஒரு செங்கல் பார்சல்
Kirachand
மம்தா எங்களுடன் தான் இருக்கிறார். பீகாரில் இந்தியா கூட்டணியாக இணைந்து போராடுவோம்! – ராகுல் காந்தி
ஒரு கூட்டணியை உருவாக்குவதும் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்துவது மாதிரித்தான் போல?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள் : நீதிபதி ஆனந்த் வெஙக்டேஷ் விசாரிக்க ஒப்புதல்!
நேரு இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்: மாநிலங்களவையில் காங்கிரசை கடுமையாக சாடிய மோடி