அண்ணா திமுகன்ற பேரை ஏற்கனவே அனைத்திந்திய அண்ணா திமுகனு எம்ஜிஆர் காலத்துலயே மாத்திட்டாங்க. இப்ப அதிமுகன்னா என்னனு ஒரு 2கே கிட்ஸுக்கிட்ட கேட்டேன். அந்தப் பையன் ரொம்ப ரீசியா, ‘நேத்து எடப்பாடி அப்பீல் பண்ணினாரு, இன்னிக்கு பன்னீர் அப்பீல் பண்றாரு. அதனால அப்பீல் திமுகனு வச்சிக்கலாம்னு அழகா ஒரு பேர் வச்சிட்டான். அட நல்லா இருக்குல்ல? இபிஎஸ், ஓபிஎஸ் அப்பீலை பாத்துப்பாங்க.
நீங்க அப்டேட் பாருங்க,

Sasikumar J
விலை போகாத மலர்கள் என்று நம்மை ஒதுக்கியவர்களுக்கு விலை உயர்ந்த நறுமணம் வீசும் சென்ட் பாட்டில் ஆக மீண்டுவருவோம் என்று தெரிவதில்லை…!

balebalu
மாதத்தில் முதல் வாரம் “செலவு” – கடைசி வாரம் “கடன்”
-OneWordTweets
ஜோக்கர் சித்தர்
மரம் இல்லைன்னா மலைகள் அழகில்லை பணம் இல்லைன்னா மனிதனுக்கு மதிப்பில்லை…
-அமீன்

Mannar & company
என்ன பெரிய ஒத்தை வார்த்தை ட்வீட்டு..
காதலன் பேசறப்ப காதலி பேசுற வார்த்தை தெரியுமா..
ஒத்த எழுத்து ‘ம்’ தான்.
சரவணன். ????
டெலிகிராம் என்பது புதிய படங்களை HD தரத்தில் டவுன்லோட் செய்யவும் பேஸ்புக் என்பது பழைய நினைவுகளை நினைவூட்டும் டைரியாகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது

ரஹீம் கஸ்ஸாலி
கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் சாதனை – அண்ணாமலை
குஜராத்தை தானே…?!
சித்ரா தேவி
உயர் அதிகாரிகளிடம் அலைபேசியில் காய்ச்சல் என்று லீவு கேட்க இருமிக் காட்டி குரலை மாற்றிப் பேசும்போதுதான் நமக்குள் இருக்கும் சிவாஜி விழித்துக் கொள்கிறார்.
Mannar & company
நடந்ததையே நினைக்க வைப்பது பிகர்,
நடக்கணுமேன்னு நினைக்க வைப்பது சுகர்
-வாக்கிங்

கோழியின் கிறுக்கல்!
‘நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியலைடா’ என்று சொல்லும் பெண்ணைக் கூட நம்பலாம்,
ஆனா ‘இன்னும் அஞ்சு நிமிடத்தில அங்க இருப்பேன் மச்சி’ ன்னு சொல்ற நண்பனை நம்பவேக் கூடாது!!
லாக் ஆப்