’ஏங்க… அவங்க நம்ம பங்காளிங்க’ : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

நேத்து மேட்ச் பாத்துட்டு நம்ம நண்பர் ஒருத்தர் ரொம்ப சந்தோசமா இருந்தாரு…  நானும் இந்தியா வழக்கம்போல பாகிஸ்தான ஜெயிச்சதுக்குதான் இவ்ளோ சந்தோசம்னு நெனச்சி…

”செம மேட்சுல… ரோகித் பின்னிட்டாரு.. சிராஜ் செம பவுலிங்னு சம்பவத்த அடுக்கிட்டு இருந்தேன்… அதுக்கு அந்த நண்பர்… ”அதாப்பா முக்கியம்…? அந்த பாகிஸ்தான் பிளேயர் அவுட்டாகி வரும்போது… ஜெய் ஸ்ரீ ராம்னு கத்துனாங்க பாரு… அதான் சம்பவம்”னு சொல்லிட்டு மனுசன் ஒரே குஷி…

”அதுசரி வர்ற 29ம் தேதி இங்கிலாந்து கூட மேட்ச் இருக்கு… அப்ப 300 வருசமா நம்மளை ஆண்ட இங்கிலீஷ் துரைகள பாத்து “வெள்ளையனே வெளியேறு” ன்னு கத்துவாங்களா?”ன்னு தான் கேட்டேன்…

மனுஷன் அப்செட் ஆயிட்டாரு…  நீங்க அப்டேட் பாருங்க ப்ரெண்ட்ஸ்!

கடைநிலை ஊழியன்

இந்த வருஷம் “பிக் பில்லியன் டே” ல புது ஃபோன் வாங்கணும்னு தேட ஆரம்பிச்சு,

சரி அடுத்த வருஷம் வாங்கிக்கலாம் ‘ங்கிற மனநிலைக்கு வருவது தான் பக்குவம் !!

லிட்டில் கிருஷ்ணா

Tomorrow Monday ன்னு சங்கடபடாத..

5 நாள்ல வீக் எண்ட் வருது அத நெனச்சி சந்தோஷபடு…

அதிபன்
இந்தியாவுலேயே குடும்ப அரசியல் இல்லாத ஒரே கட்சி அதிமுக தான்
யாருப்பா சொன்னது?
~ வந்தவாசி முன்னாள் அதிமுக MP வேணுகோபால் மகன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்ங்க

வசந்த்

தடுப்பதற்கு யாரும் இல்லாத போது சண்டையின் விறுவிறுப்பு ஏனோ சட்டென்று குறைந்து விடுகிறது…
ரயில் கணேசன்
செய்தி – தேர்வு அறைக்கு Blue tooth கொண்டு சென்று தேர்வு எழுதிய வட இந்தியர்கள் கைது
NEET தேர்வில் கம்மல் , மூக்குத்திவரை கழட்ட சொல்றவனுங்க, தமிழ்நாட்டுக்கான பணி தேர்வில் ஏன் இது போன்ற சோதனைகள் செய்வதில்லை… 
ℳsd ❝இதயவன்❞
சன் ரைஸ் ஆவதும் தெரியாது.. சன் செட்ஆவதும் தெரியாது..
அதனால் தான் என்னவோ அதுக்கு பேரு சன் டே!!!
Kirachand
தங்கம் விலை கிடு கிடுன்னு உயர்ந்துடுச்சி மாமா…
இஸ்ரேல் – பாலஸ்தீன போராலா மாப்ள?
இல்ல…எனக்கும் என் மனைவிக்கும் சண்டை மாமா…
Prabhu
பாஸ் எப்படி ஒரே வார்த்தைல பாக் வீரர்களை கேவலபடுதிட்டோம்
எப்புட்றா
ஜெய் ஸ்ரீ ராம் சொல்லிதான்…
ℳsd ❝இதயவன்❞
தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பாஜக நுழையும் – ஹெச்.ராஜா
நீங்க எங்க நுழைச்சாலும் அங்க வடிவேலு ரூபத்தில் நாங்க நிற்போம் – மீம்ஸ் கிரியேட்டர்கள்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share