இன்னைக்கு நம்ம ஆபிஸுக்கு பஞ்சாப் சிங் ஒருத்தரு வந்தாரு.. சிங் னா சிங்கம் மாறி இருப்பாங்களே இவரு என்ன இப்படி தொங்கி போய் சோகமா இருக்காரேன்னே பக்கத்துல போனேன்…
என்னா சர்தார்ஜி,… உங்களுக்கு என்னா சோகம்னு கேட்டேன்.. அதுக்கு அவரு ”வீட்டுல பொண்டாட்டி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாதத்துக்கு டைவர்ஸ்ட் நோட்டீஸ் அனுப்புட்டுமானு கேட்குறா தம்பின்னு சொல்லி வருத்தப்பட்டாரு…
அதுசரி உன் வீட்டுக்கு வந்த ஆளும் சரியில்ல… உன் ஸ்டேட்டுக்கு வந்த ஆளுநரும் சரியில்லன்னு சொல்லிட்டு, உன் வீட்டுல மட்டுமா இந்த பிரச்சன… என் வீட்டுல கூட இதே பிரச்சன்ன தான்னு சொல்லிட்டு அப்படியே சர்தார்ஜிய கூப்டுக்கிட்டு டீக்கடைக்கு கிளம்பிட்டோம்…
சரி நீங்க அப்டேட் குமாரு பாருங்க
amudu
அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்காத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு.
அப்படியே அந்த புளியோதரை சாப்பிட வராத தொண்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்க சார்.
https://twitter.com/i/status/1694755945035772185
ℳsd ❝இதயவன்❞
அஜித் பவார் எங்கள் தலைவர்; கட்சி பிளவுபடவில்லை~
சரத் பவார்
சரத்பவார் கட்சியில குழப்பம் இத்லையாம் குழப்பத்துக்குள்ள தான் சரத்பவார் கட்சியே இருக்காம்?!
கிருஷ்
நிலவின் தென் துருவத்தில் வடை சுடப்படும் -மோடி
அப்பனா புளி சோறு பார்சல் என்னோடது -எடப்பாடி
சின்னம்மா தான் அங்கே தலைமை தாங்கவேண்டும் -ops
எனக்கு வாக்களித்தால் நிலவுக்கு செல்ல இருபது ரூபாய் டோக்கன் வழங்கப்படும்-TTV dinakaran
பராமரிப்பு செலவு அதிகம் என்பதால் அதானி விண்வெளி ஆராய்ச்சி மையமாக மாற்றப்படும் -ஊறுகாய்
விழுப்புரம் தர்மபுரியில் ISRO ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் -சின்ன மருத்துவர் ஐயா
நிலவில் மெய்ன் ரோடு போடப்படும் -ஜெயக்குமார்
டோல்கேட் வைக்கப்படும் -நிதின்கட்கரி
டோல்கேட் உடைக்கப்படும் -வேல்முருகன்
நிலவில் புதிய நாணயத்தை வெளியிடுவேன் -நித்தியானந்தா
சிமெண்ட் கலரில் இருக்கும் நிலவுக்கு காவி பெயிண்ட் அடிக்கப்படும் -ஜண்டா
குருநாதா
ஏம்பா உங்க வீட்டுல வரலட்சுமி விரதம் இருக்கலயா?
வொய்ப் கோவிச்சுட்டு போயிட்டா இன்னும் வரல..
அப்ப வரல’லட்சுமி விரதம்னு சொல்லுங்க
balebalu
புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது – செய்தி
நல்ல வேளை நடிகர் திலகம் உயிரோட இல்ல
https://twitter.com/krish_itz/status/1694921558777614638?s=20
சரவணன். ????
நடைபயணத்தில் பகவத் கீதையை விட பைபிளும், குர்ஆனும் அதிகமாக பரிசாக வந்துள்ளன ~ அண்ணாமலை
அது வேற ஒன்னுமில்ல.. அதைப் படிச்சுட்டாவது திருந்துங்கடா ன்னு சொல்லி இருக்காங்க
Suresh AK
இன்னைக்கு கேப்டன் Photo போட்டு நல்ல மனிதன் நல்ல தலைவன்னு போஸ்ட் போடுறவன் லாம் யாரு..
10 வருஷம் முன்னாடி அவர பத்தி மீம்ஸ் ட்ரோல்ஸ் போட்டு அந்த மனுஷன அசிங்க படுத்துன பயலுவ தான்..
amudu
உலகின் முக்கியமான பிரச்சினைகளை ஜி-20 மன்றத்தின் மூலம் தீர்க்கலாம். -ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு பிரச்சனைக்கு இதில் தீர்வு கிடைக்குமா!?
https://twitter.com/i/status/1694945522883137675
ℳsd ❝இதயவன்❞
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமிக்கு அதிக கூட்டம் வந்துள்ளது – மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
ஜெ வானிலிருந்து ~ விஞ்ஞானி விஞ்ஞானி?!
லாக் ஆப்
‘ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கையா?’: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதில்!
பிக்பாஸ் சீசன் 7: இரட்டை கமல் கொடுத்த செம ட்விஸ்ட்!