வாட்ஸ் அப் நோண்டிகிட்டு இருக்கும்போது நம்ம எடப்பாடியார் அயோத்தி கோயில் வளாகத்துல நிக்குற போட்டோவ பிஜேபி நண்பர் ஒருத்தரு அனுப்பிருந்தாரு. update kumaru January 22-2023
என்னடா இவரு மறுபடியும் அங்கேயே போய்டாரான்னு குழம்பி போய் நாம அதிமுக ஐடி விங் தம்பிக்கிட்ட போன் பண்ணி கேட்டேன்.
அவரு பதறி போபி… அய்யயோ… அய்யா இப்பதான் கன்னியாகுமரில அய்யாவழி வைகுண்டர் தோப்புக்கு போயி கும்பிட்டுட்டு வெளியே வந்து சட்டய மாத்திருக்காரு… அதுக்குள்ள அயோத்தி கூப்டு போயிட்டாங்களா அப்படினு சொல்லி ஒரிஜினல் போட்டோவையும் நமக்கு அனுப்புனாரு.
இதுபோல இன்னும் எத்தன பேர அயோத்தி அழைச்சிட்டு போனோங்களோ… அந்த ராமருக்கு தான் வெளிச்சம்…
நீங்க அப்டேட்ட பாருங்க…
Mannar & company™🕗
ஆண்களுக்கு
கல்யாணம் பண்றவரைக்கும்தான்
வேலையில்லை, முடிகொட்டுதல், தொப்பைல்லாம் ‘பெரிய’ பிரச்சினையா தெரியும்,
கல்யாணத்துக்கு பிறகுதான்
கல்யாணத்தைவிட அதெல்லாம் பெரிய பிரச்சினைகளே இல்லன்னு தெரியும்!
ஜோ…😎😎
பழங்குடியை சேர்ந்த ஒரு பெண்மணியை கூப்பிட்டு வச்சு “குடியரசுத்தலைவரா” ஆக்குறது அவங்க அரசியல்..
ஆனா அவங்கள ஒரு கோயில் திறப்புக்கு கூட கூப்பிடாம இருக்குறது தான் அவங்க அடையாளம்..
Sasikumar J
வீதியோரம் இருக்கும் மாடி வீடுகளில் இருப்பவருக்கு
கயிற்றில் கட்டப்பட்ட மஞ்சபையே ‘லிப்ட்’
James Stanly
என்னணே.. அயோத்தி போன தலைவரு கன்டென்ட்டே குடுக்கல..
*வெயிட் பண்ணுங்கடா.. அவரு எப்பயும் சென்னை ஏர்போர்ட்டுலதான் சிக்குவாரு..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இன்னைக்கு ஆபிஸுக்கு லீவு போட்டேன் மாமா..
சூப்பர் மாப்ள.. அயோத்தி லைவ் பாக்க போறியா..?
அயோத்தியா..? வழக்கமா ஞாயித்துகிழமை எடுக்கற மட்டன் நேத்து எடுக்க முடியாம போச்சு.. அதான் இன்னைக்கு பிரியாணி செஞ்சு திங்கனும் மாமா..
Mannar & company™🕗
நமக்கு என்ன பண்ணுது, நம்ம உடம்பில் எங்கெங்க வலிக்குது,
என்பதெல்லாம் திங்கட்கிழமை காலையில் வேலைக்கு போகும்போது கரெக்டா தெரியுது!
Kirachand
தாமதமாக கோயில் கட்டியதற்காக மன்னிப்பு கோருகிறேன்.ராமர் எங்களை மன்னிப்பார்! – பிரதமர் மோடி
தேர்தல் வருகிறது என்பதற்காக அவசர கோலத்தில் திறந்ததற்கு கண்டிப்பாக மன்னிக்க மாட்டார் ஜி!
குருநாதா
மம்மி:ஏன் டா , ரூம் ல தூங்கும் போது மட்டும் பாதி தூக்கத்துலயே எந்திரிச்சிற…
இதாம்மா “அறை”த்தூக்கம்
மம்மி: 😡😡
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
அயோத்தியில் ராமர்: டிரெண்டிங்கில் ராவணன்
டிஜிட்டல் திண்ணை: அறநிலையத்துறைக்குள் அயோத்தீ… சேகர்பாபுவை சுற்றி என்ன நடக்கிறது?
அயோத்தியில் தன்னை முன்னிறுத்தும் மோடி: சுப்பிரமணியன் சுவாமி தொடர் தாக்குதல்!