மாநாடு முடிஞ்சி அயோத்திக்கு போறேன் : அப்டேட் குமாரு
சேலம் திமுக மாநாட்டுக்கு போயிருந்த நண்பனுக்கு போன் பண்ணி, ”என்ன கேசவா நல்லபடியா முடிஞ்சதா… இப்போ எங்க போய்ட்டு இருக்கேன்னு கேட்டேன்.
அதுக்கு அவன், ’எல்லாம் பிரியாணியோட சிறப்பா முடிஞ்சது இப்போ அயோத்தி பக்கம் போய்ட்டு இருக்கேன்னு சொன்னான்.
இத கேட்டு உடனே பகீர்னு இருக்க, ’மாநாடு முடிஞ்சி முழுசா ஒருமணி நேரம் கூட ஆகல… அதுக்குள்ள இந்த எஸ்டீம்ல இருந்து அந்த எஸ்டீம்க்கு போறீயே… ஒன்னும் புரியலப்பான்’னு சொன்னேன்.
அதுக்கு அவன் ‘ஓஹோ நீ வெளியூர்காரனா… அது உபி அயோத்தி இல்ல… சேலம் அயோத்தியா பட்டிணம் அது பக்கம் போய்ட்டு இருக்கேன்.. வீட்டுக்கு போய்ட்டு கால் பண்றேன்’னு சொல்றான்.
ஒரு நிமிஷத்துல அலற விட்டுட்டான்… நீங்க அப்டேட்ஸ் பாருங்க
மயக்குநன்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவதுதான் அதிமுகவுக்கு நல்லது!- சசிகலா.
அதிமுகவுக்கு நல்லது செய்யணும்னுதான் சின்னம்மாவையே விட்டுக்கொடுத்துட்டுப் போயிட்டாங்க போல..?!
balebalu
ராமர் வீதி உலா வருவதற்குள்
வதந்தி உலக உலா வருகிறது
ச ப் பா ணி
வருமான வரி உச்சவரம்பு இந்த ஆண்டு உயர்த்தப்படுமா?
2014-2015ல் இருந்து இந்த வரி மட்டும் மாறவே இல்லை
#மத்தியபட்ஜெட்
தர்மஅடி தர்மலிங்கம்
சாம்பியன்’களை உருவாக்கும் பூமி தமிழ்நாடு! – பிரதமர் மோடி!
‘கேம்பேய்ன்’… பண்றாராம்…
சரவணன். ????
ஜன.22ல் டெல்லி எய்ம்ஸ் மதியம் வரை செயல்படாது – எய்ம்ஸ் நிர்வாகம்
மதுரை எய்ம்ஸ் ~ நான்லாம் ரொம்ப நாளாவே அப்படித்தான் இருக்கேன், போவியா..
கடைநிலை ஊழியன்
பஸ்ல துண்டு போட்டு ஜன்னல் சீட்டு பிடிக்கிறவங்க, வழிவிட்டு ஜன்னல் சீட்டு கொடுத்தா, அது குளிர்காலம் னு அர்த்தம் !!
balebalu
அழைப்பு வந்துள்ளது , ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளபோகிறேன் : தலைமறைவாக உள்ள நித்தியானந்தா அறிவிப்பு – செய்தி
பழைய MGR படம் போல மாறுவேஷத்தில் மரு வைத்து கொண்டு வருவாரோ
தர்மஅடி தர்மலிங்கம்
ஓடாத காளைகளுடன் மோதுவதில்லை: ஜெயக்குமார்!
கூட்டணி முறிஞ்ச பிறகு தான் தெரியுது போல அது ஓடாத காளைன்னு.?!
உள்ளூராட்டக்காரன்
நாளை காலை முதல் மதியம் 2:30 மணி வரை இந்த IDயில் பதிவுகள் இடப்படாது
அமைதி நல்லிணக்கம் ஆன்மீக அறிவொளி என அனைத்தும் கிடைக்கட்டும்
மயக்குநன்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என வதந்தி பரப்பப்படுகிறது!- முதல்வர் ஸ்டாலின்.
பேசாம சின்னவரை துணை முதல்வராக்கி… வதந்திக்கு முற்றுப்புள்ளி வெச்சிட வேண்டியதானே..?!
லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
“ராமர் கோயில் – கேள்வி கேட்டால் ICE வைப்பார்கள்” : இளைஞரணி மாநாட்டில் கனிமொழி