இன்னிக்கு சாயந்தரம் டீ குடிச்சிட்டு ஆபீஸ் திரும்பிட்டிருந்தப்ப தகதகனு முழு நிலா ஜொலிக்க ஆரம்பிச்சிருந்துச்சு. நம்ம டீம்ல ஒரு நண்பர், ‘அங்க பாருங்க…. விக்ரம் லேண்டர் அந்த ஓரமா நிக்குது பாருங்க’னு ஏதோ அந்த பக்கம் போற பஸ்ஸை கை காமிக்கிற மாதிரி நிலா பக்கமா கை காமிச்சாரு.
என்னங்க இப்படி சொல்றீங்க உங்களுக்கே நல்லா இருக்கானு கேட்டேன்… டிவில கூட்டணினு சொன்னா மட்டும் வாயப் பொளந்துட்டு பாப்பீங்க, நான் நிலாவுல லேண்டர் நிக்குதுனு சொன்னா மட்டும் நம்ப மாட்டேங்குறீங்களேனு கேட்டாரு. நம்புறேன்னு சொன்னேன். டீக்கும் பப்ஸுக்கும் காசு அவர்தானே கொடுத்தாரு. அதனால நிலாவுல விக்ரம் லேண்டர் தெரியுதுனு சொன்னாலும் நம்பிதான் ஆகணும். அவ்வை பாட்டி அதை ரிப்பேர் பாக்குறானு சொன்னாலும் நம்பிதான் ஆகணும்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
சரவணன். 𝓜
பாஜகவின் தலைமையிலிருந்து தினமும் என்னிடம் பேசுகின்றனர்! – ஓபிஎஸ்!
நீங்க அடிச்சு விடுங்க தலைவரே.. உங்களை யார் கேட்கப் போறாங்க..
Kirachand
நாம் குடை கொண்டு போகும்போது மழை வராது. அதுபோலத்தான் பரீட்சையில் நாம் படித்திருக்கும் பாடங்களில் இருந்து கேள்விகள் வராது…
ஜோ…
ஆமா ஜீ, மணிப்பூர்ல திரும்பவும் கலவரம் வெடிச்சி, உயிர்ப்பலிலாம் ஏற்பட்டுச்சே.. அப்போ நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?
ஜீ ~ நானா? நான் என் யூ டியூப் சேனலுக்கு எல்லாரையும் சப்ஸ்க்ரைப் பண்ண சொல்லி கேட்டுட்டு இருந்தேன்..
balebalu
நிலா பாட்டி வடைக்கு பதிலா
‘பொங்கல்’ பண்ணி சாப்பிட வெச்சுட்டாங்க போல
விக்ரம் லேண்டர் இப்படி தூங்குதே
கோழியின் கிறுக்கல்!
‘என் கிட்ட என்ன மாத்திக்கணும்’ னு என்று ஒரு பெண் கேட்கும் தருணத்தில்,
உண்மையை சொல்கிறேன் என்று உளறிக் கொட்டும் ஆணுக்கு விமோசனமே இல்லை!!
ஜோ…
ஐயோ, IPS சார். 1962ல ஆட்சி செஞ்சது காங்கிரஸ். திமுக இல்ல..
~ என்னதான் 1962 ல காங்கிரஸ் ஆட்சி செஞ்சாலும், 2023 ல அவங்க கூட கூட்டணில இருக்கிறது திமுகதானே.. அப்போ அன்னைக்கு மருதமலைக்கு மின்சாரம் குடுக்காததுக்கு காரணம் திமுகதானே..
நெல்லை அண்ணாச்சி
எனது YOUTUBE சேனலுக்கு ஆதரவு அளிக்கவும்…. அனைத்து வீடியோக்களையும் பெற பெல் ஐகானை தட்டவும்
…மோடிஜி…
#எங்களுக்கு நிறைய ” ஜோலி ” கிடக்கு….சாரே..!!
லாக் ஆப்
ஆசிய போட்டிகள் 2023: 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!
டெங்கு தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.வுக்கு காய்ச்சல்!