பைக் சர்வீஸூக்கு விட்டதனால ஆபிஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு போக பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன்.
ரொம்ப நாள் கழிச்சி பஸ்சுல போறேமேன்னு சந்தோசம்… ஆனா அரைமணி நேரம் கழிச்சி வந்த பஸ்சுல நிரம்பி வழிஞ்ச கூட்டத்த பாத்ததும் திக்குன்னு இருந்துச்சு…
ஒருவழியா சமாளிச்சு உள்ளே ஏறிட்டேன். அப்போ டிக்கெட் கேட்ட கண்டக்டர் கிட்ட ஒரு பெரியவர் 100 ரூவாய நீட்டுனாரு. அவ்வளவு தான் கண்டக்டர் காண்டாகி, “என்னய்யா ஏறுருவங்க எல்லாரும் இப்படி 100 ரூவாயா நீட்டுனா என்ன பண்றது?”ன்னு கேட்டாரு… அதுக்கு பெரியவர்… “சில்ற இல்லாம நீங்க ஏன்யா இங்க இருக்கீங்க?”ன்னு பேச… வாக்குவாதம் பெருசா போய்க்கிட்டு இருந்துச்சி.
பிறகு நானே அந்த பெரியவருக்கும் சேத்து டிக்கெட் எடுத்து கொடுத்துட்டு.. அரைமணி நேரம் கழிச்சி ஒருவழியா வீட்டுக்கு வந்தேன். அப்போ மொபைல்ல இனி 2000 ரூவா நோட்ட கண்டக்டர் யாரும் வாங்ககூடாதுன்னு அரசு உத்தரவு போட்டுருக்கு…
அதுவும் சரிதான் நூறு ரூபாய்க்கே பஸ்சுல இவ்ளோ சண்ட நடக்குது… இதுல 2000 நோட்ட கொடுத்தவனோட நிலைமைய நெனச்சா… பாவங்க…
சரி நீங்க அப்டேட்ட பாருங்க…
கடைநிலை ஊழியன்
அதிமுக தலைமை –
கூட்டணி இல்ல னு சொன்னதுக்கு வெடி வெடிச்சு கொண்டாடுனது எவன் டா..
ℳsd ❝இதயவன்❞
அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை… அதை கட்டி வைத்து பாதுகாத்தது பாஜக- நன்றி மறந்தவர் இபிஎஸ்- எச் ராஜா
அதான் முடிஞ்ச வரைக்கும் ஊறுகாய் போட்டு பயன்படுத்திகிட்டிங்களே அப்புறம் என்ன?!
குருநாதா
காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்..
அப்புறம் என்னாச்சு?
பெயிலாயிட்டேன், அரேஞ்சுடு மேரேஜ் கோர்ஸ்ல ஜாய்ன் பண்ணீட்டேன்
balebalu
அதிமுக பாஜ கூட்டணி முறிந்ததுல யாருக்கு லாபம்
பட்டாசு விற்றவங்களுக்கும் ,லட்டு கடைக்காரர்களுக்கும்
சரவணன். ????
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அசாம் மாநிலத்தில் இருந்து அதிகளவில் நோயாளிகள் வரும் நிலையில், அவர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள் கொண்ட இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது
ஏன் ஆபிசர்.. இங்க வேலூர் வந்து கட்டிடம் கட்றதுக்கு பதிலா அங்க அசாம்லேயே ஒரு ஹாஸ்பிடல் கட்டி இருக்கலாமே?
சிந்தனை
எண்ணங்கள் குறித்து கவனமாக இருங்கள், ஏனெனில் அவை உங்கள் வார்த்தைகளாக மாறும்…????
வார்த்தைகளின் மீது கவனமாக இருங்கள், அது உங்கள் செயல்களாக மாறும்…????
செயல்கள் மீது கவனமாக இருங்கள்! அது உங்கள் பழக்க வழக்கமாக மாறும்…????
பழக்க வழக்கத்தின் மீது கவனமாக இருங்கள், அது உங்கள் குணமாக மாறும்…????
குணத்தின் மீது கவனமாக இருங்கள்! அது தான் உங்கள் விதியை தீர்மானிக்கும்…????
கவின் மலர்
தோழர். ஏ.கே.பத்மநாபன் அவர்களின் பெயரில் இன்று ஒரு நட்பு அழைப்பு. அவர் பெயரைப் பார்த்ததும் ஏற்றுக்கொண்டேன். உடனே இன்பாக்ஸில் hi how are you வந்தது. புரிந்துவிட்டது. இது அவரில்லை.
ஏற்கனவே பல முறை இந்த மாதிரி ஐடிக்களில் இப்படிப் பேசத் தொடங்கி பணம் கேட்பதைப் பார்த்ததால் எச்சரிக்கை ஆகிவிட்டேன்.
ஃபேஸ்புக் தோழரின் ஒரிஜினல் ஐடியின் லிங்கைத் தந்து நீங்கள் chat செய்வது அவரிடம் இல்லை எனச் சொன்னது நல்லது. உறுதியே ஆகிவிட்டது.
Where are you என்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் வேண்டுமென்றே ‘எங்கே இருக்கீங்க?’ என தமிழில் கேட்டேன். தமிழ் தெரிஞ்சாத்தானே பதில் வரும்?
Do you have gpay? என்று நேராக விஷயத்திற்கு வந்தான்.
“இருக்கு. என்ன விஷயம்” என மீண்டும் தமிழில் கேட்டேன்
அந்தப் பார்ட்டிக்கு ஒன்றும் புரியவில்லை என்பதால் பேசாமல் ஓடிவிட்டது.
மோசடிக்காரர்களை வாயடைக்க வைக்க தமிழில் பேசினால் போதும் போல. இங்கேயும் சரி. நாடாளுமன்றத்திலும் சரி.
கோழியின் கிறுக்கல்!!
ஹீரோவாக ஆரம்பித்து, வில்லனாக பயணித்து, மீண்டும் ஹீரோவாக முடிகிறது,
ஒரு தந்தையின் வாழ்க்கை!!
லாக் ஆப்
புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!