வந்தே பாரத்லே: அப்டேட் குமாரு
அங்க விட்டு இங்க விட்டு கடைசியில நம்ம திருநெவேலிக்கே உட்டுட்டாங்கலே… நம்மூருக்கு வந்தே பாரத்லே னு ஒரு சவுண்டைக் கேட்டு திரும்பிப் பார்த்தா நம்ம நெல்லைக்கார நண்பன் தான். ‘ஏன்லே… வந்தே பாரத் சோதனை ஓட்டம் ஓடும்போதே கோவில்பட்டில நிக்கிலைனு ஆர்பாட்டம்னு அறிவிச்சிட்டோம் பாத்தியாலே…?’னு திரும்பிப் கேட்டாப்ல அந்த நெல்லை சகா.
நான் அவர்கிட்ட மெல்ல, ‘ஏன்யா இதுக்கெல்லாம் ஆர்பாட்டம் பண்ணிக்கிட்டிருக்கீங்க? வண்டி கோவில்பட்டியை கிராஸ் பண்ணும்போது மாட்டை ஓட்டிக்கிட்டு வந்தா, தானா நின்னுடும்னு ஏறிக்க வேண்டியதுதானே?’னு கேட்டேன். முறைப்பா பாத்துட்டு போயிட்டாப்ல….
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
அதிமுகவின் தற்போதைய ஒரே பலம் இரட்டை இலை சின்னம்! -டி.டி.வி.தினகரன்.
ஒரே பலவீனம் தாமரையா?
ℳsd ❝இதயவன்❞
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு தள்ளுபடி ~
இது ஜாமீன் தள்ளுபடி பண்ணும் வாரம் ?!
balebalu
இருக்கு ஆனா இல்ல – டயலாக் சரியா பொருந்துது
#அதிமுகபிஜேபிகூட்டணி
https://twitter.com/selvinnellai87/status/1705254054434087401
balebalu
நாளை உடல்நிலை சரி இல்லை என்றால் இதே Zero Percentile மருத்துவர்களிடம் தான்
நீட்டை ஆதரிப்போரும் , நீதிபதிகளும் கூட சென்று வைத்தியம் பார்த்து கொள்ள நேரிடும்????
#BanNeet
ச ப் பா ணி
போனில் சார்ஜ் ஃபுல்லா இருக்கும் போது..
தனிமை என்பது வரம்தான்
நெல்லை அண்ணாச்சி
பிச்சை எடுக்குமாம் பெருமாளு…
அதை புடுங்குமாம் அனுமாரு…
# minimum balance
பர்வீன் யூனுஸ்
இதென்ன முறியும் வாரமா.. டி.டி.எஃப் வாசனுக்கு கை முறிவு.. அதிமுக – பிஜேபி கூட்டணி முறிவு.
மனிதன்
விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது, மக்கள் நீதி மையத்திற்கு கூட்டம் சேராதா? : கமல்ஹாசன்
~ அட என்னங்க… தோச சுட்டவனுக்கு துப்பாக்கி எடுத்து சுட தெரியாதா ….மொமென்ட்
லாக் ஆஃப்
ஆந்திராவின் விஜயகாந்த்… யார் இந்த பாலகிருஷ்ணா?
நெல்லை – சென்னை வந்தே பாரத் : கட்டணம் எவ்வளவு தெரியுமா?