பாரதம்னு பேர் வச்சா இந்தியா முன்னேறும்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

அண்ணே இந்தியாவுக்கு பாரத்னு பேர் வக்கப் போறாங்களானு பஜ்ஜிய பிச்சுக்கிட்டே கேட்டான் நம்ம தம்பி. டீ போட்டுக்கிட்டிருந்த மாஸ்டர், ‘அப்படியா இது எப்போ?’னு கேட்டாரு.

நம்ம குடியரசுத் தலைவர் இருக்காங்கள்ல, அவங்க ஒரு டின்னர் கொடுக்குறாங்க, அந்த டின்னர்லதான் பேரை மாத்தப் போறாங்களாம்னு சொன்னேன்.

’என்னண்ணே டின்னர்ல வச்சு மாத்துற அளவுக்கான்னா நம்ம நாடு ஆகிப் போச்சு?’ம்னு கேட்டாரு.

பக்கத்துல இன்னொரு தம்பி, ’பாரதம்னு வச்சா நம்ம நாடு முன்னேறிடும்ணே’னு சொன்னாரு. ‘என்னாய்யா சொல்றேனு கேட்டேன்.

விரலைவிட்டி ஏபிசிடி சொல்லிப் பாத்துக்கிட்டே… ‘இப்ப ஐ.நா.வுல இந்தியா I எழுத்துல ஆரம்பிக்கிறதால ஒன்பதாவது இடத்துல இருக்குண்ணே…

பாரத்னு பேர் மாத்தினா ’B’ எழுத்துல ஆரம்பிக்கும்ல. அதனால இரண்டாவது இடத்துக்கு முன்னேறிடும்ணே’னு சொன்னாப்ல
யோவ் இதை மோடிக்கிட்ட சொல்லிடாதய்யானு தெறிச்சு ஓடி வந்துட்டேன்.

நீங்க அப்டேட்ட பாருங்க…

மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩

Meanwhile incase india name change to Bharat ~
பாரதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதியன் ஓவர்சீஸ் பேங், பாரதியன் ஆயில், பாரத் பீரிமியர் லீக், பாரத் டுடே..

ஷேக்பரித்

உலக வங்கி இப்போ கொடுத்த கடன திருப்பி கேட்டா என்னடா பண்ணுவீங்க.
இந்தியாட்ட தான கொடுத்த நாங்க பாரத்னு சொல்லி எஸ்கேப் ஆகிருவோம், ஜீ யா கொக்கா..


கீழை மீம்ஸ்

“இந்தியா” என்ற பெயரை “பாரத்” என்று மாற்ற ஒன்றிய அரசு பரிசீலனை.
கண்ணாடியை திருப்புன ஆட்டோ ஓடுமா … மொமெண்ட்


ஜோ…

“இந்தியா ஆபத்துல இருக்கு” அதனால எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு ஆட்சிக்கு வந்தாங்க,
இப்போ “இந்தியா”ங்குற பேரே ஆபத்தா இருக்கு, அதனால பேர மாத்துறோம், எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு வந்து நிக்குறானுங்க..!!


கடைநிலை ஊழியன்*

எதுக்குடா நைட் 12 மணிக்கு “Happy Teacher’s day” ‘னு WhatsApp அனுப்புன..
ஒரு surprise ‘க்கு நைட் அனுப்புனேன் சார்..
நைட் செல்போன் யூஸ் பண்ண கூடாது ‘னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..


லிட்டில் கிருஷ்ணா

நாங்க வேணும்னா நாட்டுப் பேர மாத்திக்கிறோம்
அதுக்கு பதிலா பிரதமர மாத்தித் தருவீங்களானு சொல்லுங்க.. வேல கெடக்கு..


balebalu

என்ன பெயரை வேணா மாத்துங்க ஆனா அதை வெறும் government record ல மட்டும் வெச்சுக்குங்க
ஆதார் கார்டி லிருந்து பாஸ்போர்ட் , டிரைவிங் லைசென்ஸ் வரை பெயரை மாத்த சொல்லி சாமானிய மக்களை கியூவுல நிக்க வெச்சீங்க அவ்வளவுதான்…


ஷேக்பரித்*

இத்தன வருசத்துல நாட்ட ல
என்ன மாத்துனீங்கனு கேட்க கூடாது.. அதுக்கு தான் நாட்டோட பேரையே மாத்த போறோம்..

Lakshmi Subramanian

இந்தியா – இந்தியர்
பாரதம் – பாரதியார்.
அப்பவும் நாங்கதான். தெற்கு வாழும்


சாரல்

அப்ப ரூபாயில் Reserve Bank of India’ அப்படின்னு இருக்கே..
அந்த நோட்டை எல்லாம் என்னடா பண்றது?
நினைச்சாலே தலை சுத்துது

black cat 2

இந்தியால இருக்க எல்லா பிரச்சனையும் மறக்கணும்னா என்ன பண்றது… இந்தியாவோட பேர மாத்துனா, அது ஒரு பிரச்சனையா ஆக்கின எல்லா பிரச்சனையும் மறந்துருவாங்க டா.


லாக் ஆஃப்

இந்தியா என்ற பெயர் பெருமை தரவில்லையா? – சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி!

பாரததேசம் என்று தான் பாரதியார் சொன்னார்: தமிழிசை சவுந்தரராஜன்

+1
3
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *