முதலமைச்சரா…. பிரதமரா… பாவம் அவரே குழம்பிட்டாரு: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

சாயங்காலம் ஆயிடுச்சே சரின்னு டீக்கடைக்கு போனா, அங்க டிவில, வரும் நாடாளுமன்ற தேர்தல்ல பிரதமர் மோடி ராமநாதபுரத்துல போட்டியிட்டா நான் அவர எதிர்த்துப் போட்டியிடுவேன்னு சீமான் பேசிட்டு இருந்த வீடியோ ஓடிட்டு இருந்துச்சு.

அதோட நிக்காம ”இனிமே மோடியோட போட்டி போட்டா தான் எனக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு விடிவு காலம் போல”ன்னு குரல் கம்மி பண்ணி பேசுனாரு..

அத பாத்துட்டு நம்ம பக்கத்து வீட்டு பத்மநாபன், “விடியல் விடியல்னு சொல்லியே ஒருத்தரு தேர்தல்ல ஜெயிச்சி சிஎம் ஆயிட்டாரு…

மக்களுக்கு விடிவு காலம் தர்ரேன்னு சொல்லிட்டு இருந்த சீமானை… இன்னைக்கு அவருக்கே எப்போ விடிவு காலம் பொறக்கும்னு தெரியாம புலம்ப வச்சிட்டாங்க பாத்தீங்களா”ன்னு சொன்னான்.

அதுக்கு நான்,  “இதுவர நான் தமிழ்நாட்டுக்கு சி.எம்.ஆவன்னு தான் சீமான் சொல்லிட்டு இருந்தாரு.. இப்போ என்ன பொசுக்குன்னு நாடாளுமன்ற தேர்தல போட்டி போடுறாரு… ஒருவேள ஸ்ட்ரெய்ட்டா பி.எம் பதவிக்கு குறிவைக்கிறோரா?”ன்னு கேட்டேன்.

பாவம் பயபுள்ள குழம்பிட்டான்…  சரி நீங்க அப்டேட்ட பாருங்க…

ஜோ…
நெல்சன்: சார், படம் சக்ஸஸ் ஆயிருச்சே, அந்த நடிகர் மாதிரி நீங்களும் கார் வாங்கி குடுப்பீங்களா?
சூப்பர் : டேய், நான் குடுக்கவேண்டிய வாடகையே ஒழுங்கா குடுக்கமாட்டேன்டா. என்கிட்ட போய் கிப்ட் எதிர்பார்குறியே..

ℳsd ❝இதயவன்❞
நிலவின் பகுதிகளுக்கு பெயர் வைக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடிக்கு யார் கொடுத்தது – காங்கிரஸ் கண்டனம்!
நீங்க இப்ப கேட்டு அவரு அதுக்கும் காரணம் நேரு னு சொல்லவா?!

Sasikumar J
பொண்டாட்டி கிட்ட சண்டை வரமா இருந்தா ரசமும் சாம்பாராக இருக்கும் சண்ட வந்தா சாம்பாரும் ரசம் மாதிரி தான் இருக்கும்…!

கடைநிலை ஊழியன்
ஞாயிற்றுக்கிழமை னா என்ன பிளான் பண்ணுவ..
காலைல லேட்டா எழுந்திருக்கனும் னு பிளான் பண்ணுவேன்.. ஆனா எப்பவும் விட சீக்கிரமா எழுந்திருச்சுருவேன்..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால்,
நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் – சீமான்

# நோட்டா : எச்சூச்மீ நானும் போட்டி போட வரட்டுமா..?

ArulrajArun

என்னதான் மதியானம் சாப்பிட்டுட்டு ஆலமரத்தடியில் அரை மணி நேரம் தூங்கினாலும்ஆபீஸ்ல தூங்குற அஞ்சு நிமிஷத்துக்கு ஈடாகாது

plip plip 2.0
விக்ரம் 300 கோடி வசூல்லோகேஷக்கு Lexus கார் பரிசளித்த கமல்ஜெய்லர் 500 கோடி வசூல்Meanwhile ரஜினி to நெல்சன்~ இந்தா இமயமலை துன்னுறு இத பூசிட்டு படு.

மயக்குநன்
அடுத்த இலக்கு சூரியனை ஆய்வு செய்ய விண்கலம்!- பிரதமர் மோடி.
‘உதயசூரியனை’ ஆய்வு செய்யத்தான் அமலாக்கத்துறையை அனுப்புவாங்க போல..?

கடைநிலை ஊழியன்

கமல் – அதே பிக்பாஸ், அதே வீடு, அதே சண்டை, அதே எலிமினேஷன், ரொம்ப boring ஆ இருக்கு ‘னு எல்லாரும் சொல்றாங்க..
விஜய் டிவி – அப்ப ரெண்டு வீடு போட்டுக்கோங்க..
லாக் ஆப்
+1
1
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *