இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன். போன வாரம் கல்யாணமான நம்ம நண்பனையும் அந்த கல்யாணத்துல பாத்தேன்.
‘என்னடா… இல்வாழ்க்கை எப்படி போகுது?’னு கேட்டேன். ‘இந்தியா கூட்டணி மாதிரி போகுது மாப்ள’ அப்படின்னான்.
என்னடா சொல்றேனு நான் திரும்பிக் கேட்டதுக்கு, ‘ஆமாடா மாப்ள… மம்தா, அரவிந்த் கேஜ்ரிவால் அவங்கள்லாம், நாங்க இந்தியா கூட்டணியிலதான் இருக்கோம். ஆனா தனிச்சு போட்டியிடுறோம்’னு சொல்லிட்டாங்கள்ல.
அதேபோலதான்… கூட்டுக் குடும்பமா ஒரே வீட்லதான் இருக்கோம். ஆனா தனித் தனி சமையல்தான். இன்னும் என் பொண்டாட்டி முழுசா குடும்பக் கூட்டணிக்குள்ள வரலைடா’அப்படினு சொன்னான்.
இந்தியா கூட்டணியை நெனைச்சு வருத்தப்படுறதா… இவன் குடும்பத்தை நெனைச்சு வருத்தப்படுறதா…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
சுதந்திரம் பெற நேதாஜியே காரணம்! – ஆளுநர் ஆர்.என்.ரவி
காந்திஜி நவ் : ஹே ராம்…
நெல்லை அண்ணாச்சி
நாளை வாக்காளர் தினமாமே…!!!
#வாயில அடிங்க வாயில அடிங்க ” EVM ” தினம்…!!?
பர்வீன் யூனுஸ்
தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் – கமல்ஹாசன் # கொஞ்சம் புரியுற மாதிரி அறிவிச்சா நல்லா இருக்கும்.
balebalu
உலக அளவில் பொய் செய்தி பரப்புவதில் இந்தியா முதலிடம் – செய்தி
உலக பல்கலைக்கழகங்களில் ‘வாட்ஸப் யூனிவர்சிட்டி’ முந்துகிறது
Journalist புல்லட் ஜாக்கி
அஜித் அயோத்திக்கு போகல கவனிச்சிங்களா..
“டேய் தலைவன் ஷூட்டிங்க்கே போக மாட்டான்டா..”
ச ப் பா ணி
Daughter is not tension;
she is equal to Ten-sons.
இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்
ℳsd இதயவன்
“தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை” – மம்தா பானர்ஜி
உங்க பாஜக எதிர்ப்பு என்ன னு இன்னைக்கு மக்களுக்கும் தெரிஞ்சிருக்கும்?!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பர்வீன் யூனுஸ்
அயோத்தி ராமர் கோயில் பற்றி நான் 30 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது தான் இப்போதும் – கமல்ஹாசன் # அப்ப சொன்னது புரியலேன்னு தானே இப்ப கேக்குறோம்!
balebalu
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முதல்வர் மறைமுக விமர்சனம் – செய்தி
எப்படியும் ரோஷம் வந்து உடனே கட்ட போறதில்ல
நேரடியாகவே விமர்சனம் பண்ணலாம்…
black cat 2
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்த தோனியை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலக்க வேண்டும்..
“டேய் அவன் இண்டியன் டீம்ல இருந்து ரிட்டையர் ஆயி பல வருஷம் ஆச்சுடா
𝕷𝖎𝖙𝖙𝖑𝖊 𝖕𝖗𝖎𝖓𝖈𝖊𝖘𝖘
~நீங்க ராமர் பக்கமா..??
இல்ல பாபர் பக்கமா…??
~நாங்க கருப்புசாமி பக்கம் ங்க…
ச ப் பா ணி
பெரும்பாலான அலைபேசி அழைப்புகள் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்வதாகவே உள்ளது
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டி2௦ உலகக்கோப்பை: இந்திய அணிக்கான வீரர்களை இறுதி செய்த டிராவிட்?
ஆம்னி பேருந்து நிலையத்தில் நுழைய தடை : பயணிகள் அவதி!