ராமர் கோயில் திறப்பு விழாவ முன்னிட்டு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிட்டு இருக்கு, இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் லீவு விட்டது போல எய்ம்ஸ் ஜிப்மர் மருத்துவமனைகளுக்கும் அரை நாள் லீவு கொடுத்து இருக்காங்க…
இத பத்தி, நம்ம ஃபிரண்டு கிட்ட சொன்ன போது, இனி நோய் வந்தா ஆஸ்பத்திரிக்கு போக தேவையில்ல, கோயிலுக்கு போனா போதும் போலையே, அந்த கடவுள் தான் காப்பாத்தணும்னு சொல்றாரு….
சரி இப்படியே பேசிக்கிட்டு இருந்தா, லேட்டாயிடும்… என் மனைவி கிட்ட இருந்து என்ன யாராலையும் காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
PMAY-U திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைப் பார்த்தபோது,என் குழந்தை பருவத்தில் எனக்கும் இதுபோன்ற ஒரு வீட்டில் வாழ வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்!-பிரதமர் மோடி
ஆனா…நாட்டையே உங்க இஷ்டப்படி ஆட்டிப் படைத்து ஆளும் வாய்ப்பு கிடைக்கும்னு அப்ப நீங்க நினைக்கலதானே?
நெல்லை அண்ணாச்சி
22/01/2024 இறந்தவர்களை ” தகனம் ” செய்ய 5 மாநிலங்களில் தடை…
#அடேய்… வாழ தான் விடவில்லை
at least நிம்மதியா சாக விடுங்கடா..!!
ArulrajArun
அடுத்த மாதம் பிரதமர் மீண்டும் தமிழகம் வர வாய்ப்பு – அண்ணாமலை
தமிழக மக்கள்; வரட்டும் வரட்டும்
வசந்த்
ஃபேமிலி ல கடன் வாங்கவும் கூடாது
பேங்க் ல லோன் வாங்கவும் கூடாது ரெண்டுமே குடும்பத்துக்கு ஆகாது.
Mannar & company
கணவர்கள் தங்களின் அன்பை மனைவிக்கு விளக்கி சொல்வதைவிட,
பாத்திரங்களை “விளக்கி” தந்தாலே போதும் புரிஞ்சிப்பாங்க!
balebalu
பிரபலங்களின் திருமண அறிவிப்பு / முறிவு மேடை
-இன்ஸ்டாக்ராம்
கோழியின் கிறுக்கல்!!
எளிய மக்களின் Disneyland -நகர “பொருட்காட்சி”!!
ஆல்தோட்டபூபதி
ஜி ஏன் சோகமா இருக்காரு?
எதிர் டீம்ல ட்ரோன்ல தலைவர்கள் படத்தை காமிச்சுக்கிட்டு இருக்காங்க.. இங்க குளிச்சுட்டு வந்து குப்பைய கூட்டுன்னு புரோகிராம் போட்டு தரானுங்களாம்.
அதையே எவ்ளோ நாளைக்கு தான் யா திங்குறது..?🥺 pic.twitter.com/xkptAS01sr
— 💥gₐZZₐₗᵢ💥 (@ivan_gaZZali) January 20, 2024
கடைநிலை ஊழியன்
கடன் அன்பை முறிக்கும் ‘னு தெரிஞ்சும் கடன் வாங்க வைக்குறது தான் சூழ்நிலை !!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நேரு – உதயநிதி போட்ட ரூட் : திமுக மாநாட்டு ஏற்பாடுகள் – பந்தல் சிவா பேட்டி!
அந்த ரெண்டு பேரும் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்டாங்க: ராகுல் டிராவிட்
பேனா முக்கியமா கோயில் முக்கியமா