என்ன லோகேஷ் ப்ரோ இப்படி சொல்லிட்டீங்க : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

லியோ பட டைரக்டர் லோகேஷூ ’முத 10 நிமிஷத்த யாரும் மிஸ் பண்ணிடாதீங்க’ன்னு சொல்லிருக்காரு.. அத நெனச்சி வழக்கமா ஆபிசுக்கு லேட்டா வர்ற நம்ம ’லேட் கமிங்’ கண்ணையா சோகமா இருந்தாரு…

’இதுல என்னய்யா இருக்கு’ன்னு கேட்டதுக்கு… “நான் லா ஆபிசுக்கு மட்டுமா… தியேட்டருக்கும் லேட்டா தான் போவேன்…  என்ன மாறியே இங்க பல பேரு, படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷம் கழிச்சு தான், படம் பாக்குறவன் மூஞ்சில டார்ச் அடிச்சி சீட்ல உட்காருவாங்க…

நெலம இப்படி இருக்கும்போது… எதுக்குயா இவங்க முத 10 நிமிஷத்துல நல்ல சீன வைக்குறாங்க… வழக்கம்போல இண்டர்வெல்லயோ இல்லனா கிளைமாக்ஸ்லயோ வைக்க வேண்டிதானே?”ன்னு சோகமா கேட்குறாரு…

ம்ஹ்ம்ம்ம்… நீங்க அப்டேட் பாருங்க…

ℳsd ❝இதயவன்❞

முதலாளிகள் & மேனேஜர்கள்~ இந்தியா பாகிஸ்தான் மேட்ச் வந்தா போதும்..

வயித்த வலி தலைவலி னு லீவு போட்டுட்டு கூட்டம் கூட்டமா கிளம்பிறாய்ங்க?!

Mannar & company™

வீட்டில் இருக்கும் இட்லி மாவு கொடுக்கும் தைரியத்தை வேறு யாராலும் கொடுக்க முடியாது!

-மனைவியின் டைரிக்குறிப்பில் இருந்து..

gurunaatha

அடடா அடடா.. இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே…”

ப்ளடி ராஸ்கல் கண்ணீர தொடைக்காம டேஸ்ட் பாத்துருக்க நீ…

நாகராஜா சோழன் MA MLA

தொடர்ந்து மூன்று நாள் கண் விழித்து வாகனமும் ஓட்டி லோடும் இறக்கி பெற்ற பணத்தை மொத்தமாக
” ஸ்கூல் பீஸ் கட்டிடு” என மகனிடம் கொடுக்கும் டிரைவரின் வியர்வையில் வீசுகிறது…

தாய்ப்பாலின் வாசம்!

mohanram.ko

ஜி டூ இந்தியன் கிரிக்கெட் டீம் – எப்படியாவது பாகிஸ்தான் மேட்ச்சை மட்டும் ஜெயிச்சிடுங்கப்பா, அதை வச்சி தான்ப்பா நார்த் இந்தியால ஓட்டு வாங்கணும்!

balebalu

ஸ்டேடியத்தில் “Speed ” ன்னு சொன்னவுடன்

பும்ராவை நினைத்தால் பழைய ஜெனரேஷன்..

யூடியூபரை நினைத்தால் புது ஜெனரேஷன்.. #INDvsPAK

BeckyFan

~ சம்பந்தமே இல்லாமல், இஸ்ரேல் -க்கு ஆதரவா ஏன்-டா பேசுறீங்க ?

சங்கி : அவங்க-தானே நமக்காக நிலாவுக்கு சந்திரயான் அனுப்பினாங்க, அதனால்-தான்

~ மூதேவி, அது ’இஸ்ரோ’ டா, இஸ்ரேல் இல்ல!

ArulrajArun
நீங்க இந்த புரட்டாசி அமாவாசைக்கு விரதம் எல்லாம் இருக்க மாட்டீங்களா
Bachelor me  ~ வாழ்க்கைய அமாவாசை விரதம் மாதிரி தான் போகுது.. இதுல நாங்க தனியா வேற விரதம் இருக்கனுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

ஜிகர்தண்டா 2 படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட்..!

டிஜிட்டல் திண்ணை: மாநிலத் தலைவர் மாற்றம், பிரியங்கா தமிழ்நாட்டுப் பொறுப்பாளர்… சோனியா கூட்டத்தில் நடந்தது என்ன?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share