memes trolls update kumaru11 trending videos

காத்து அடிக்குது… காத்து அடிக்குது… அப்டேட் குமாரு

டிரெண்டிங்

ஸ்டேடியத்துல ஃபேன்ஸ் கூட்டமே இல்லாம ஏதோ கொரோனா காலத்துல விளையாடுறமாறி இந்த உலகக்கோப்பை இப்படி மட்டமா நடக்குறத பாத்தாலே வெறுப்பா இருக்குன்னு நம்ம நண்பனிடம் சொல்லிட்டு இருந்தேன்.

அவனும் வழக்கம்போல ஒரு ’ஆமா சாமி’ போடுவான்னு பாத்தா…. டேய்… ”வெட்டியா கிரிக்கெட் மேட்ச் பார்த்து நாட்டு மக்கள் குறிப்பா இளைஞர்களோட நேரம் வீணாகுதேன்னு தான் உலக கோப்பையை இப்படி வேணும்னே மட்டமா நடத்துறாங்க போல”ன்னு சொன்னா பாருங்க… கண்ணுல ஜலம் விட்ருச்சி… 

ஒருவேள அந்த ஜெய் ஷா வோட சொந்தக்காரானா இருப்பானோ….

நீங்க அப்டேட் பாருங்க….

Image

குருநாதா
கல்யாணம் பண்ணுங்க சார் லைப் நல்லாருக்கும்

யாரு லைப்?

பந்தல்காரர்,மைக் செட்காரர் ,சமையக்காரர்

Image

Kirachand

அதிமுக ஆட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு! ஒரே வீட்டுக்கு இரண்டு பயனாளிகள் – சி.ஏ.ஜி. அறிக்கை

சின்ன வீடு,பெரிய வீடா இருக்குமா?

கடைநிலை ஊழியன்

டு TTF – பைக் கிட்ட என்ன பண்ணிட்டு இருக்க..

சும்மா பக்கத்துல இருந்து பாத்துட்டு இருக்கேன் ங்க..

ℳsd ❝இதயவன்❞

உலகின் நண்பனாக இந்தியா திகழ்கிறது ~ மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

ஆமாமா மணிப்பூர் போன்ற உள்ளூர் மாநிலங்களுக்கு தான் பங்காளியாக திகழ்கிறது?!

memes trolls update kumaru11 trending videos

கடைநிலை ஊழியன்

my mobile ~ டேய்.. யாரு டா நீ.. நிமிஷத்துக்கு நாலு தடவ, App ‘ப open பண்ற close பண்ற..

memes trolls update kumaru11 trending videos

Dr.தண்டச்சோறு
மகாநதி படத்துல மகளைத் தேடி கமல் கொல்கத்தா போவாரு…
மஜ்னு படத்துல பிரசாந்த் லவ்வரைத்தேடி கொல்கத்தா தான் போவாரு…
ஜேஜே படத்துல மாதவனும் லவ்வரைத் தேடி அங்க தான் போவாரு..
வேதாளம் படத்தில் வில்லனை தேடி அஜித் கொல்கத்தா போவார்…
Finally அண்ணாத்த படத்துலயும் ரஜினி தங்கச்சியத் தேடி, same place தான்…
இந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுலாம் தரவேண்டாம்…
தயவுசெய்து இனி காணாம அல்லது ஓடிப்போறவங்க வேற ஸ்டேட் போங்க.. பாத்துப் பாத்து போரடிக்குது !

memes trolls update kumaru11 trending videos

ச ப் பா ணி
Perfume அடித்தால் தான் வெளியே கிளம்புவேன் என்பதும் ஒருவித ‘மண நோய்’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

”தொகுதி மறுவரையறை… தென்னிந்தியாவிற்கு எதிரான சதி”: உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

இனி நோக்கியா ஃப்ளிப் மாடலிலும் UPI ஸ்கேன் வசதி!

+1
2
+1
12
+1
0
+1
7
+1
0
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *