சாயந்தர பேப்பரப் பாத்துட்டு டக்குனு நிமிந்து பாத்த நண்பன், ‘ஆளுநர் மாளிகைக்கு போகணும்… அட்வான்ஸ் புக்கிங் பண்ண வர்றியா?’னு கேட்டான். ‘என்னடா… திடீர்னு அவரை எதுக்கு நீ பார்க்க போறே?’னு கேட்டேன். ‘இந்த பாரு பேப்பர்ல போட்டிருக்கு. ஆளுநர் மாளிகையில கொலு வைக்க போறாங்களாம். அதுக்கு டெய்லி 150 பேர் வரைக்கும் அலவ்டு உண்டாம். வா போய் பாத்துட்டு வரலாம்’னு சொன்னான்.
அதுக்கு நான் சொன்னேன், ‘ஆளுநர் மாளிகையில கொலு வைக்கிறது, அவங்க அரசியல். ஆனா, அரசியல் சட்டப்படி ஆளுநரே ஒரு கொலு பொம்மைதாங்குறது என்னோட அரசியல். நீ வேணா போயிட்டு வா. நான் வேற எங்காவது போறேன்’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க.
Kirachand
லியோ படத்துக்கு காலை 4 மணி, 7 மணி காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!
பாக்கத்தான போற பரீட்சைக்கு அலாரம் வச்சி எழுந்திரிச்சி படிக்காதவன் கூட… படத்தைப் பார்க்க அலாரம் வச்சி ஓடப்போற ஓட்டத்த…
ArulrajArun
மழை பெய்யும் போது நாம நனையாமப் போகனும்னு நினைக்கிறவன் மனுசன்
நாம போட்டு இருக்க Shoe ம் நனையாமப் போகனும்னு நினைக்கிறவன் பெரிய மனுசன்
ச ப் பா ணி
கிரெடிட் கார்டின் அருமை அமேசான் ஆஃபர் போடும்போது தெரியும்
தர்மஅடி தர்மலிங்கம்
யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை – இபிஎஸ்!
அப்போ ஒருவேளை… இவருக்கு இவரே கொடுத்துக்கிட்ட அழுத்தமா இருக்குமோ.?!
மயக்குநன்
கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகுதான் ‘மஞ்சளின் மகிமை’ அனைவருக்கும் தெரிய வந்துள்ளது!- பிரதமர் மோடி.
கொரோனா நேரத்தில் விளக்கேத்தி நீங்க மணியடிக்கச் சொன்னப்பதான்… ‘காவியின் மகிமை’ தெரிய வந்துச்சு ஜீ..!
✒️Writer SJB✒️
ஒரு நாள் எமன் உங்களை அழைத்துக் கொண்டு போக வருவான் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்பான்..
அப்ப நீங்க மோடி பிரஸ்மீட் நடத்துவதை என் கண்ணால் பார்க்கணும்னு சொல்லிடுங்க..
அப்புறம் உங்களுக்கு சாவே கிடையாது..!!!!
😁😂😂 pic.twitter.com/yfm0gmSwaZ
— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi) October 11, 2023
ஜோ
2023 வேர்ல்ட் கப் ஜெயிச்சு இந்தியாக்கு பெருமை சேர்க்கணுமா?
சங்கீஸ் ~ அது அநாவசியம், பாகிஸ்தான மட்டும் தோக்கடிச்சா போதும்..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலை, ரகுமான் சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகளுக்கு பதவி!
ராஜ்ய சபா நிதியிலிருந்து ராஜா செய்த பணி!